அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்?.. மாருதி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (2022 Maruti Suzuki XL6) காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் எக்ஸ்எல்6 (XL6) எம்பிவி ரக காரை இந்தியாவில் கடந்த வியாழன் அன்று (ஏப்ரல் 21) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கணிசமான காஸ்மெட்டிக் அப்டேட்டுகள் ஆகியவற்றுடன் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

எனவே இந்தியர்களின் கவனத்தை புதிய எக்ஸ்எல்6 மிக சிறப்பாக ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த கவன ஈர்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் ஓர் புதிய தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியாகியுள்ளது. அது, ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் பற்றிய விபரம் ஆகும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

மாருதி சுஸுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்எல்6 கார் மாடலில் புதிய 1.5 லிட்டர் ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி, கே12சி பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இந்த மோட்டார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜினே மிக சிறந்த மைலேஜை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இதன் மேனுவல் வேரியண்ட் 20.97 கிமீ மைலேஜையும், தானியங்கி வேரியண்ட் 20.27 கிமீ மைலேஜையும் வழங்கும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இந்த மைலேஜ் திறனை மிகக் குறைவு என்று கூறிவிட முடியாது. மாருதி எக்ஸ்எல்6 ஜெட்டா, ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா-ப்ளஸ் ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இவற்றிற்கான முன்பதிவு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் முன்தொகையில் புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக வென்டிலேட் இருக்கைகள் இருக்கின்றன. அவை, முன்பகுதியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் மற்றும் முன் பக்க பயணிகளுக்கு மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க இந்த வென்டிலேட் இருக்கைகள் உதவும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இத்துடன், 2022 பலேனோ காரில் வழங்கப்பட்டிருப்பதை போல 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவும் எக்ஸ்எல்6 காரில் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் செய்யும் போது பேருதவியாக இருக்கும். இத்துடன், வெளிப்புறத்தில் நடைபெறும் அசைவுகளையும் இக்கேமிராவின் வாயிலாக காண முடியும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இத்துடன், 2022 எக்ஸ்எல்6 காரில் ஹெட்ஸ்-அப் திரையும் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் ஸ்பீடு, எஞ்ஜின் ஆர்பிஎம், நேவிகேஷன் தகவல், மற்றும் எஞ்ஜின் சிம்பள் உள்ளிட்டவைற்றை காண்பிக்கும். ஓட்டுநர் சாலையின் மீதிருக்கும் கவனத்தைச் சிதற வைக்காமலே இந்த அனைத்து தகவலையும் ஹெட்ஸ்-அப் திரை பார்ப்பதற்கு வழங்கும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இந்த அம்சத்தை மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பலேனோ காரிலேயே முதல் முறையாக வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக தற்போது எக்ஸ்எல்6 காரிலும் மாருதி சுஸுகி வழங்கியிருக்கின்றது. 2022 எக்ஸ்எல்6 கார் மாடலில் இடம் பெற்றிருக்கும் மற்றுமொரு சிறப்பம்சமாக 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காட்சியளிக்கின்றது.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடியோ வசதிக் கொண்ட இத்திரையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-ப்ளே உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர சுஸுகி இணைப்பு வசதியும் அதில் கொடுக்கப்படும். இதன் வாயிலாக காரில் உள்ள ஏசி, ஹெட்லைட் போன்ற சில கருவிகளை கார் உரிமையாளர்களால் இருந்த இடத்தில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்ய முடியும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

பாதுகாப்பு வசதிகளாக 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் டயர்களில் உள்ள காற்றைக் கண்கானிக்கும் டயர் பிரஷ்ஷர் மாணிட்டர், 4 ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சென்சார் வசதிக் கொண்ட ரியர் பார்க்கிங் கேமிரா, ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்எல்6 காரில் மாருதி சுஸுகி பயன்படுத்தியிருக்கும் 1.5 லிட்டர் கே15சி எஞ்ஜின் ஓர் அதிக சிறப்பு வாய்ந்த மோட்டாராக காட்சியளிக்கின்றது. இந்த எஞ்ஜின் ஒரு சிலிண்டருக்கு இரு இன்ஜெக்டர்கள் வீதம் பெற்றிருக்கின்றது. ஆகையால், மிக சிறந்த கன்ட்ரோலையும், எரிபொருள் சிக்கனத்தையும் அது வழங்கும்.

அதிக பாதுகாப்பு வசதி இருக்குது ஓகே... மைலேஜ் எவ்ளோ தரும்? மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் விபரம் வெளியீடு!

இத்தகைய சூப்பரான காராகவே 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை முதல் முறையாக மாருதி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மேலும், இந்த காரை இப்போதுதான் முதல் முறையாக புதுப்பித்தும் விற்பனைக்குக் களமிறக்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2022, 13:29 [IST]
English summary
2022 maruti suzuki xl6 fuel efficiency details unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+