மார்ச் 7ம் தேதி லான்ச்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ போக முடியுமா? சூப்பரான எலெக்ட்ரிக் காரா இருக்கே!

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளது. இந்த சூழலில், 2022 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி இந்தியா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இதன்படி எம்ஜி இந்தியா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 2022 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் மார்ச் 7ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

2022 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, இந்தியா முழுவதும் உள்ள எம்ஜி டீலர்ஷிப்கள் ஏற்கனவே முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளன. அத்துடன் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் செயல்பட்டு வரும் எம்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலையில் 2022 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிதாக விற்பனைக்கு வரவுள்ள மாடல் பல்வேறு விதங்களில் மேம்பட்டது. இதன்படி புதிய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், நேர்த்தியான ஹெட்லேம்ப்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்லைட்கள், முன் மற்றும் பின் பகுதியில் அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள் ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

அத்துடன் 17 இன்ச் அலாய் வீல்களும் புதிய டிசைனை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்பை காட்டிலும் ஸ்போர்ட்டியாக இருக்கலாம். இன்டீரியரை பொறுத்தவரையில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலும் வழங்கப்படலாம்.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், கேபின் ஏர் ஃபில்டர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ஆண்ட்ராடு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

அதேபோல் 44.5 kWh பேட்டரி தொகுப்பிற்கு பதிலாக பெரிய 51 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டிரைவிங் ரேஞ்ச் 419 கிலோ மீட்டர்களில் இருந்து (அராய் சான்று வழங்கிய ரேஞ்ச்), சுமார் 480 கிலோ மீட்டர்களாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 21.49 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25.18 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் புதிய மாடலின் விலை இதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இருக்கும் ஒரே ஒரு நேரடி போட்டியாகும். இதன்படி 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு தொடர்ந்து சவால் அளிக்கும். அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நேரடி போட்டி இல்லை என்றாலும் கூட, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான விலை குறைந்த மாற்று தேர்வாக பார்க்கப்படுகிறது.

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுக தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தொடர்ந்து, நடப்பாண்டில் மேலும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடல், டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவை மிகவும் முக்கியமானவை.

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2022, 23:24 [IST]
English summary
2022 mg zs electric suv india launch date announced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+