விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி. சற்று விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காராக இருந்தாலும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

இந்த வரிசையில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், தற்போது விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனையாகியுள்ளன. இதுதான் இந்த கார் விற்பனையில் கடந்துள்ள புதிய மைல்கல். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி சற்று விலை உயர்ந்த கார் ஆகும்.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

அதே நேரத்தில் இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவில்லை. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை எலெக்ட்ரிக் கார்கள் ஈர்த்து வருகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற கட்டமைப்பு வசதிகளும் இன்னும் பெரிதாக அதிகரிக்கவில்லை.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

இதை எல்லாம் வைத்து பார்க்கையில், வெறும் சுமார் 4 மாதங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது என்பது, 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று வருகிறது. அப்டேட் செய்யப்பட்ட புதிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 'எக்ஸைட்' மற்றும் 'எக்ஸ்க்ளூசிவ்' ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 50.3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 461 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் சற்று குறையலாம் என்றாலும், இது தொலை தூர பயணங்களையும் செய்வதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச்தான் என்பதில் சந்தேகமில்லை.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

7.4kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 9 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில் 50kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 60 நிமிடங்களிலேயே (1 மணி நேரம்), பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல்-பேன் பனரோமிக் ஸ்கைரூஃப், டிஜிட்டல் ப்ளூடூத் கீ, ரியர்-டிரைவ் அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா, ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் 75க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளுடன் ஐ-ஸ்மார்ட் என ஏராளமான வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு முன்பு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மட்டுமே போட்டியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலான டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக வந்துள்ளது.

விற்பனையில் சாதனை படைக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... பொறுங்க... டாடா இப்பதான போட்டிக்கு வந்திருக்கு!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் கார் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளதால், வரும் மாதங்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கடுமையான நெருக்கடி ஏற்படலாம். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2022 mg zs ev facelift crosses new sales milestone in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X