புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேம்படுத்தப்பட்ட இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வரும் வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன் புதிய மாடலின் வெளிப்புறத்தில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், இன்டீரியலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலமாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கிடைக்கும் வசதிகளின் பட்டியலும் பெரிதாக்கப்பட்டுள்ளது. 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் எம்ஜி நிறுவனம் 2,798 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2020ம் ஆண்டில் வெறும் 1,142 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இது 145 சதவீத வளர்ச்சியாகும். விற்பனையில் கிடைத்துள்ள இந்த உத்வேகத்தை, புதிய மாடலின் மூலம் மேலும் தொடர்வதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெரிய 51 kWh பேட்டரி தொகுப்பை பெற்றிருக்கும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் தற்போதைய மாடலில் 44.5 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 419 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய மாடலில் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதால், டிரைவிங் ரேஞ்ச், அதாவது ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு 480 கிலோ மீட்டர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப தகவல்களை எம்ஜி நிறுவனம் புதிய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுகத்திற்கு நெருக்கமாகதான் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் வெளிப்புறத்தில், புதிதாக வடிவமைக்கப்பட்ட க்ரில் அமைப்பு கொடுக்கப்படவுள்ளது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேலும் புதிய எல்இடி டெயில்லேம்ப்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்கள், மேம்படுத்தப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் ஆகியவையும் 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளன. அதே சமயம் இதன் உட்புறத்தில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் புதிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகளையும் புதிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றிருக்கும். பெரிய பேட்டரி தொகுப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போதைய மாடலை காட்டிலும், புதிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

2022 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தவிர, இந்த காரின் புதிய வெர்ஷன் ஒன்றையும் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இருக்கும் பேட்டரியை விட சிறிய பேட்டரி தொகுப்பை இந்த புதிய வெர்ஷன் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், இந்த புதிய வெர்ஷன் போட்டியிடும்.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் காராக உள்ளது. விலையை குறைத்து, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் நேரடியாக போட்டியிடும் வகையில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷனை எம்ஜி நிறுவனம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிங் தொடங்கியாச்சு... ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கார் இவ்ளோ கிமீ ஓடுமா? எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் இந்த புதிய வெர்ஷன் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ, நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி தொகுப்பை விட பெரிய பேட்டரி தொகுப்புடன் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, February 25, 2022, 23:57 [IST]
English summary
2022 mg zs ev to launch soon details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+