புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

2022ம் ஆண்டிற்கான புதிய மெர்சிடிஸ் சி கிளாஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த முழு விபரங்களையும் விலை விபரங்களையும் காணலாம் வாருங்கள்

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

ஒரு மனிதன் சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் அவன் வைத்திருக்கும் வாகனத்தில் இருக்கிறது. சில குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சமூகத்தில் அதற்கென்றே தனி மரியாதை ஏற்படுகிறது. இந்த ரக மரியாதையை வழங்கும் நிறுவனம் தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் கார்களை பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படும்.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் தற்போது தனது 2022 புதிய சி கிளாஸ் காரை இன்று அறிமுகப்படுத்துகிறது. 1993ம் ஆண்டு பென்ஸ் நிறுவனம் முதல் முறையாக சி கிளாஸ் காரை அறிமுகப்படுத்தியது. அன்று முதல் இந்தியச் சந்தையில் சி கிளாஸ் காருக்கு பயங்கரமான மவுசு உள்ளது. இதுவரை 5 தலைமுறை மாற்றங்களை இந்த கார் சந்தித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச அளவில் சி காஸ் காருக்கான 6வது தலைமுறை கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த கார் இந்திய மார்கெட்டில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கார் சர்வதேசச் சந்தையில் அறிமுகமாகும் போது "பேபி எஸ் கிளாஸ்" என்ற பட்ட பெயரைப் பெற்றது. இதற்கு முக்கியமான காரணம் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் உள்ள பல ஸ்டைல்களை இந்த சி கிளாஸ் கார் பெற்று எஸ் கிளாஸ் ஸ்டைலை விரும்பும் சி கிளாஸ் வாடிக்கையாளர்களுக்காக இந்த காரை பென்ஸ் நிறுவனம் உருவாக்கியது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் டிசைனை பொருத்தவரை பழைய தலைமுறை காரின் பெரும்பாலான ஸ்டைல்கள் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எஸ் கிளாஸ் காரில் ஹைலேட்டாக பேசப்பட்ட விஷயங்களை இந்த காரில் பொருத்தியுள்ளனர்.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் முக்கியமான அம்சமே இந்த காரின் பின்பக்க டிசைன் தான். பின்பக்க எச்சரிக்கை விளக்குகள் கேஸ்கேடிங் ஸ்டைலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பூட்லிட்டும் மேலும் ஸ்டைலான வளைவுகளைப் பெற்றுள்ளது. அதன் மத்தியில் வழக்கம் போல மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ இடம் பெற்றுள்ளது. பூட்லிட்டின் இடது பக்கத்தில் வேரியண்ட்டின் பெயர் இடம் பெற்றுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

பின்பக்க டிசைன் பெரியதாகவும் காரின் பாடியுடன் இணைந்த படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க எக்ஸாஸ்ட்டை சுற்றி க்ரோம் பட்டை டிசைன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்பக்கத்தின் ஸ்லோப்பிங் ரூப் டிசைன் புதிய சி கிளாஸ் காருக்கு நல்ல லுக்கை வழங்குகிறது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரில் 17 இன்ச் 5 ஸ்போர்க் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான C300d காருக்கு ஸ்போர்ட்டியர் ஏஎம்ஜி லைன் அலாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5வது தலைமுறை காரை விட 65 மிமீ நீளம் கூடுதலாக உள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

காரின் முன் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழக்கமான டிசைன் மொழியையே கையாண்டுள்ளது. முன்பக்கம் எல்இடி ஹெட்லைட்களுடன் ஒரு எல்இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மையப் பகுதியில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஸ்டெட்டட் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டார் லோகோவும் பொருத்தப்பட்டுள்ளது. மனிமலான டிசைனுடன் கிளாசிக் லுக்கை இந்த கார் கொட்டுள்ளது. இந்த காரின் மனிமல் டிசைன் என்ற கான்செப்ட் பலரைக் கவர்ந்துள்ளது. பல விமர்சகர்கள் இந்த கான்செப்ட்டை பாராட்டியுள்ளனர்.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் இன்டிரியரில் வழக்கமான மெர்சிடிஸ் நிறுவனத்தின் டச் இருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள லெதர் முதல் அனைத்து விஷயங்களும் பிரிமியர் விஷயங்களாக உள்ளன. இதில் லேட்டஸ்ட் தொழிற்நுட்பத்தையும் புகுத்தியுள்ளனர்.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் ஸ்யரிங் வீலே தொடுவதற்கு நல்ல ஃபீலை தருகிறது. இதிலேயே நேரடியாக இன்ஃபோடெயின்மெண்ட்டை கண்ட்ரோல் செய்யும் பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது டிரைவருக்கு நல்ல வசதியை வழங்குகிறது. மேலும் ஸ்டியரிங்கிற்கு பின்னால் 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் காரிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரில் 11.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் எஸ் கிளாஸ் இன்ஸ்பிரேஷன் தான். இது மத்தியில் லேசாகச் சாய்ந்த நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் கனெக்ட்டிவிட்டு தொழிற்நுட்பத்திற்காக MBUX பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது. இது வாய் அசிஸ்டென்ட்ட உள்ளிட்ட வசதிகளையும் வழங்குகிறது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் ஏசி வென்ட்கள் பார்க்கச் சிறப்பாகவும், சென்டர் கன்சோல்கள் கண்ட்ரோல்கள் வழக்கமான இடத்தை விட சற்று சுற்றியும், வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் காரின் தட்ப வெப்ப நிலையில் நொடிப்பொழுதில் கண்டரோலுக்குள் கொண்டு வந்துவிடுகிறது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த கார் மூன்று இன்டிரியர் கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மெச்சியாட்டோ பேஜ், சியன்னா ப்ரெளன மற்றும் கருப்பு ஆகிய நிற இன்டிரீயர் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. முக்கியமாக இந்த காரின் டிரைவிங் மோட்டிற்கு ஏற்ப இன்டிரியர் லைட்டிங் மாறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது கவர்ச்சிகரமாக உள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் சீட்கள் எல்லாம் உயர் ரக லெதரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சொகுசைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் கார் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் சரி காருக்குள் இருப்பவர்கள் சிட்டை வீட்டு அசைய வேண்டிய நிலையே இருக்காது என்கிற அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சொகுசைப் பற்றி கேட்கவா வேண்டும்?

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

காரின் பின் பக்கம் இருப்பவர்களுக்கான ஏசி வென்ட்கள் காரின் சென்டர் கண்சோலின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கிளைமேட் கண்ட்ரோல் பேனலுடன் இணைக்கப்பட்டு சுகமான அனுபவத்தைத் தருகிறது. காரின் மேல் டூயல் பேன் பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேபி ஹோல்ஸ், கிளவ் பாக்ஸ், சென்டர் கன்சோல், டோர் பேனல் ஆகிய அம்சங்களும் இந்த காருடன் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் பூட் ஸ்பேஸை பொருத்தவரை மொத்தம் 455 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவு இந்த கேட்டகிரி காரில் சாதாரணமான அளவு தான் இதைவிட அதிக அளவு கொண்ட கார்கள் இதே செக்மெண்டில் இருக்கிறது என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இதில் ஜோலிக்கும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. காரின் முன் பக்கம் இன்ஜினுடன் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 2 டீசல் இன்ஜின் மற்றும் 1 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?
C200 C220d C300d
Engine 1.5-litre turbo-petrol 2-litre diesel 2-litre diesel
Power 201 BHP 5,800-6,100 rpm 197 BHP 3,600 rpm 261 BHP 4,200 rpm
Torque 300 Nm 1800-4000 rpm 440 Nm 1,800-2,800 rpm 550 Nm 1,800-2,200 rpm
Mild-Hybrid Boost Upto 20 bhp or 200Nm Upto 20 bhp or 200Nm Upto 20 bhp or 200Nm
Claimed Fuel Efficiency 16.9 kmpl 23 kmpl 20.37kmpl
புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை C200 என்ற மாடல் காரில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 204 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக C220d காரை பொருத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

அடுத்ததாக C300d காரில் C220d காரில் உளு்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது லேசாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் அது 265 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் ஏஎம்ஜி லைன் பாடி ஒர்க் உடன் வருகிறது. இந்த இன்ஜின்கள் எல்லாம் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த கார்கள் எல்லாம் ISG என்ற மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 20 பிஎச்பி அல்லது 200 என்எம் வரையிலான டார்க் திறனை வழங்கக்கூடியது. இந்த C200 மற்றும் C220dகார் 0 விலிருந்து 100 கி.மீ தூரத்திற்கு 7.3 நொடிகளில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

மேலும் 5வது தலைமுறை காரில் ஸ்டியரிங் டிஸ் கனெக்ஷன் ஃபில் வருவதாக விமர்சனங்கள் இருந்த நிலையில் அந்த குறையை இந்த காரில் நிவர்த்தி செய்துள்ளனர். இதில் C200 கார் லிட்டருக்கு 16.9 கி.மீ வரை மைலேஜ் தரும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய அட்டேன்ஷன் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட், ஆக்டிவ் ஸ்டியரிங் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் ஹைபீம் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், 8 ஏர் பேக்குகள், ஆண்டி விப்லாஷ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

மேலும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருப்பது 11.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 2ம் தலைமுறை MBUX கனெக்ட்டிவிட்டி பிளாட்ஃபார்ம், 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, ஆம்பியண்ட் லைட்டிங், லெதர் சீட்கள், உட்புற கலர் ஆப்ஷன்கள், டூயல் பேன் சன் ரூஃப், டூயல் சோன் கிளேட் கண்ட்ரோல் ஆகியவற்றைச் சொல்லலாம்.

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?
Mercedes-Benz C-Class Price
C 200 ₹55 Lakh
C 220d ₹56 Lakh
C 300d ₹61 Lakh
புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் . . . விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த காரின் விலையைப் பொருத்தவரை c200 என்ற பெட்ரோல் இன்ஜின் கார் ரூ55 லட்சம் என்ற விலையிலும், c220d என்ற டீசல் இன்ஜின் கார் ரூ56 லட்சம் என்ற விலையிலும், c300d கார் ரூ61 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 10, 2022, 13:32 [IST]
English summary
2022 new mercedes benz c class lauched know price and other details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+