2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

2022 போர்ஷே 911 ஜிடி3 மற்றும் ஜிடி3 டூரிங் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்களை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இந்தியாவில் இன்னமும் மைலேஜை ஆராய்ந்து, குறைந்த விலையில் காரை வாங்க விரும்புபவர்களே அதிகமாக உள்ளனர். இருப்பினும் அவ்வப்போது நம் நாட்டிலும் அதிக விலையிலான லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு வருகின்றன, இந்த வகையிலேயே தற்போது போர்ஷே நிறுவனம் அதன் புதிய 2 ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்கி உள்ளது.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

911 ஜிடி3 மற்றும் 911 ஜிடி3 டூரிங் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 911 ஜிடி3 மாடலானது முற்றிலுமாக பந்தய களத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் காராகும். மேலும் இது போர்ஷே 911 மாடலின் எட்டாம் தலைமுறையின் ரேஸ்-ட்ராக் வெர்சனாகும்.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

புதிய 911 ஜிடி3 காரில் புதியதாக பெரிய அளவிலான ஸ்பாய்லர் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதுவே 911 ஜிடி3 டூரிங் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலுடன் ஒப்பிடுகையில் மிகவும் நுட்பமான மாற்றங்களை ஏற்றுள்ளது. அத்துடன் 911 ஜிடி3 காரின் செயல்திறன்மிக்க வெர்சனாக விளங்கும் டூரிங் மாடலின் செயல்படுதிறனிலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய போர்ஷே 911 ஜிடி3 கார்களில் 4.0 லிட்டர், தட்டையான-6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 503 பிஎச்பி மற்றும் 470 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் பிடிகே இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இந்த டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் என்ஜினின் ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகின்றன. போர்ஷே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்டாண்டர்ட் ஜிடி3 காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடலாம். அதுவே மேனுவல் வேரியண்ட்டில் 100kmph வேகத்தை எட்ட 3.9 வினாடிகள் தேவைப்படுமாம்.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 320கிமீ ஆகும். புதிய ஜிடி3 கார்களில் மிக முக்கிய சிறப்பம்சமாக இரட்டை-விஷ்போன் சஸ்பென்ஷன் அனைத்து நான்கு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதி வேகத்தில் வளைவுகளில் திரும்பும்போதும் எதிர்பார்க்கின்ற கண்ட்ரோல் கிடைக்கும். இதனுடன் க்ளப்ஸ்போர்ட் தொகுப்பையும் கூடுதல் ஆக்ஸஸரீகளாக புதிய 911 ஜிடி3 கார்களுடன் போர்ஷே வழங்கவுள்ளது.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இந்த தொகுப்பில் ரோல் கேஜ், 6-அச்சுகளுடன் சீட்பெல்ட் மற்றும் தீ அணைப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த தொகுப்பிற்காக கூடுதலாக எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் போர்ஷே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான லெதரால் வடிவமைக்கப்படுகின்ற இதன் கேபினில் இருவர் மட்டுமே அமரும் வகையில் இருக்கை அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

இந்த இருக்கைகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகளாக உள்ளன. உட்புறத்தில் டேஸ்போர்டில் 10.9 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு இரு பக்கங்களிலும் 7-இன்ச் டிஜிட்டல் திரைகள் உள்பட ஏகப்பட்ட பிரீமியம் தரத்திலான அம்சங்களை புதிய 911 ஜிடி3 காரில் போர்ஷே வழங்கியுள்ளது.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

முன்னதாக போர்ஷே நிறுவனம் 718 கேமன் ஜிடிஎஸ் 4.0 மற்றும் 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.46 கோடி மற்றும் ரூ.1.49 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான, பிஎஸ்6-க்கு இணக்கமான 4.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் தட்டையான-6 சிலிண்டர் என்ஜினை போர்ஷே வழங்கியுள்ளது.

2022 போர்ஷே 911 ஜிடி3 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! சுமார் ரூ.2.50 கோடியாக விலை நிர்ணயம்!

911 ஜிடி3 கார்களுடன் ஒப்பிடுகையில், இவற்றின் என்ஜின் சற்று குறைவாக 395 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளது. புதிய 911 ஜிடி3 கார்களை போல், 718 கேமன் & 718 பாக்ஸ்டர் கார்களிலும் டிரான்ஸ்மிஷனுக்கு 7-ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 8, 2022, 17:00 [IST]
English summary
2022 Porsche 911 GT3 & GT3 Touring priced at Rs. 2.50 crore.
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+