ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

2022 ரெனால்ட் க்விட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் 2022 மாடலை ரெனால்ட் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2022 ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை 4.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

2022 ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் கார், RXL (O) என்ற புதிய வேரியண்ட்டிலும் கிடைக்கும். அத்துடன் மெட்டல் மஸ்டர்டு (Metal Mustard) மற்றும் ஐஸ் கூல் ஒயிட் (Ice Cool White) ஆகிய புதிய வண்ண தேர்வுகளையும் 2022 க்விட் காரில் ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. கருப்பு நிற மேற்கூரையுடன் இந்த வண்ண தேர்வுகள் வழங்கப்படுகிறது.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் ஜான்ஸ்கர் ப்ளூ (Zanskar Blue) ஆகிய மோனோடோன் வண்ண தேர்வுகளிலும் 2022 ரெனால்ட் க்விட் கார் கிடைக்கும். குறைவான விலையில் கிடைக்க கூடிய பட்ஜெட் கார் என்றாலும், 2022 க்விட் காரில் ரெனால்ட் நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஓஆர்விஎம்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய வசதிகள் இங்கே குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர ஸ்பீடு அலர்ட் தொழில்நுட்பத்தையும் 2022 ரெனால்ட் க்விட் கார் பெற்றுள்ளது. ஆனால் புதிய க்விட் காரில் மெக்கானிக்கலாக எந்தவொரு மாற்றத்தையும் ரெனால்ட் நிறுவனம் செய்யவில்லை. 2022 ரெனால்ட் க்விட் காரில், மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என 2 பெட்ரோல் இன்ஜின்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இதில், 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 53 பிஹெச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஹெச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் க்விட் கார் விலை குறைவானது என்பதுடன், சிறப்பான மைலேஜையும் வழங்க கூடியது. இந்த காரின் 0.8 லிட்டர் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 22.25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். நடைமுறை பயன்பாட்டில் இதை காட்டிலும் குறைவான மைலேஜ்தான் கிடைக்கும் என்றாலும் கூட, அது சிறப்பான மைலேஜாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் க்விட் கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்ட க்விட் கார்களை ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்காக, ரெனால்ட் நிறுவனம் தற்போது 2022 க்விட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. புதிய 2022 க்விட் மூலம் இந்த போட்டியை சமாளிப்பதற்கு ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் கார்களில் ஒன்றாக க்விட் திகழ்கிறது. வரும் ஆண்டுகளில், ரெனால்ட் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

க்விட் தவிர, ட்ரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்களும் ரெனால்ட் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருகின்றன. இதில், ட்ரைபர் காரானது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதே சமயம் ரெனால்ட் கைகர் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்... சூப்பரான விலையில் புதிய ரெனால்ட் க்விட் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரியுமா?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிட்டு வருகிறது. இதுதவிர கியா சொனெட் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலான டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுக்கும் ரெனால்ட் கைகர் விற்பனையில் சவால் அளித்து கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 14, 2022, 16:18 [IST]
English summary
2022 renault kwid hatchback launched in india here are all the details
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+