அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

அதிக ரேஞ்ஜ் தரும் 2022 நெக்ஸான் இவி (2022 Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்ஸான் இவி-யும் ஒன்று. இந்த காரை தற்போது அப்டேட் செய்யும் பணியில் டாடா ஈடுபட்டு வருகின்றது. பயன்பாட்டில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் தரும் கார் மாடலாக அது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இந்த நிலையில் இக்காரின் அப்டேட் பணிகள் முடிவுற்றிருப்பதாகவும், அது வெகு விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, 2022 நெக்ஸான் இவி (2022 Tata Nexon EV), வரும் மே 11ம் தேதி அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதை விட அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கே 2022 நெக்ஸான் இவியில் வழங்கப்பட இருக்கின்றது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இந்த பேட்டரி ஓர் முழுமையான சார்ஜில் 400க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதுமட்டுமின்றி பவர்ஃபுல் சார்ஜிங் வசதியும் இக்காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், 6.6kW AC சார்ஜிங் வசதி நெக்ஸான் இவி-யில் வழங்கப்பட இருக்கின்றது. இது சார்ஜிங் நேரத்தை பல மடங்கு குறைக்க உதவும்.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியில் 3.3kW AC சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜாக 10 மணி நேரங்கள் வரை நேரத்தை எடுத்துக் கொள்ளும். இந்த அதிகபட்ச நேரத்தைக் குறைக்கும் பொருட்டே 6.6kW AC சார்ஜிங் வசதி 2022 நெக்ஸான் இவி வழங்கப்பட இருக்கின்றது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இத்துடன் புதிய ரீஜெனரேஷன் மோட்களையும் 2022 நெக்ஸான் இவி பெற இருக்கின்றது. இது கணிசமாக காரின் பேட்டரியை தானாக சார்ஜ் செய்ய உதவும். ஆகையால், கூடுதல் ரேஞ்ஜ் கிடைப்பது உறுதி. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் புதிய 2022 டாடா நெக்ஸான் இவி விற்பனைக்கு வர இருக்கின்றது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இக்கார் மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் அடுத்த லான்ச் பட்டியலில் ஜென் 2 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் டாடா அல்ட்ராஸ் இவி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிக தூரம் பயணிக்கும் 2022 டாடா நெக்ஸான் இவி அறிமுகம் எப்போது?.. ரொம்ப நாளா இந்த தகவலுக்குதான் காத்திருக்கோம்!

இது அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, அடுத்தடுத்து இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் நிறுவனம் விற்பனக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், ஹாரியர் உருவத்திலான புதிய எடர்னா, சியாரா உள்ளிட்ட வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: autocarindia

More from DriveSpark

Article Published On: Friday, April 29, 2022, 19:41 [IST]
English summary
2022 tata nexon ev launch date leaked via online
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+