புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய காம்ரி ஹைப்ரீட் காரினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய டொயோட்டா ஹைப்ரீட் காரினை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

டொயோட்டா இந்தியாவில் விற்பனை செய்யும் ஆற்றல்மிக்க, லக்சரி கார்களுள் காம்ரி மாடலும் ஒன்றாகும். இதன் லக்சரி ஸ்டைல் மற்றும் நேர்த்தியான தோற்றத்திற்கு ஏற்ப புதிய டிசைன் மாற்றங்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.41.70 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட காம்ரி மாடலின் வெளிப்பக்கத்தில் புதிய டிசைனில் முன்பக்க பம்பர், க்ரில் மற்றும் அலாய் சக்கரங்கள் காரின் கம்பீர தன்மையை மேலும் கூட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

அதேபோல் உட்புறத்திலும் அளவில் பெரியதாக 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை புதிய காம்ரி கார் பெற்று வந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவிற்கு இணக்கமானதாக வழங்கப்பட்டுள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது டேஸ்போர்டில் மிகவும் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

டொயோட்டா காம்ரியின் உட்புற கேபின் கருப்பு நிறத்தில் வழங்கப்படுவது வழக்கம். புதிய காம்ரியில் இந்த கருப்பு நிற அலங்கரிப்பு கூட புத்துணர்ச்சியானதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உலகளவில் பிரபலமான ஹைப்ரீட் எலக்ட்ரிக் செடான் காரின் புதிய 2022 வெர்சனை மெட்டல் ஸ்ட்ரீம் மெட்டாலிக் என்கிற புதிய நிறத்தேர்விலும் வாங்கலாம் என டொயோட்டா அறிவித்துள்ளது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

ஏற்கனவே காம்ரி ஹைப்ரீட் காருக்கு பிளாட்டினம் வெள்ளை பேர்ல், சில்வர் மெட்டாலிக், கிராஃபைட் மெட்டாலிக், சிவப்பு மைகா, ஆட்டியூட் கருப்பு மற்றும் பர்னிங் கருப்பு என்கிற 5 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய காம்ரி ஹைப்ரீட் காரின் அறிமுகம் குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் அடுல் சூட் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

அவர் கூறுகையில், "காம்ரி ஹைப்ரீட் என்பது ஆற்றல் மற்றும் ஆடம்பரத்தின் அற்புதமான கலவையாகும். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஓட்டுனர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இது ஒரு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுய-சார்ஜிங் ஹைப்ரீட் தொழிற்நுட்பமானது முன்மாதிரியான டைனமிக் செயல்திறன், முடுக்கம் மற்றும் குறைந்த மாசு உமிழ்வு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

பல ஆண்டுகளாக, இது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும் புதிய காம்ரி ஹைப்ரீட் அதன் இண்டெலிஜண்ட் வடிவமைப்பு மற்றும் ஆடம்பரமான அம்சங்களுடன் பலரை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 2013இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்திய சந்தையில் காம்ரி ஹைப்ரீட் கார் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் கார்பன் நடுநிலை சூழலை நோக்கிய டொயோட்டாவின் அசைக்க முடியாத முயற்சிகளுக்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது." என்றார்.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் காரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் ஹைப்ரீட் டைனாமிக் ஃபோர்ஸ் என்ஜின், ஆற்றல்மிக்க மோட்டார் ஜெனரேட்டர் உடன் பொருத்தப்படுகிறது. இவை இரண்டின் மூலமாக 160 கிலோவாட்ஸ் (218 பிஎஸ்) வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். காம்ரி ஹைப்ரீட் காரில் ஸ்போர்ட், ஈக்கோ மற்றும் நார்மல் என்கிற மூன்று விதமான டிரைவிங் மோட்களை டொயோட்டா வழங்கியுள்ளது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

டொயோட்டாவின் புதிய உலகளாவிய கட்டமைப்பு (TNGA)-வில் உருவாக்கப்பட்டுள்ள புதிய காம்ரி செடான் மாடல் அதிக உடல் விறைப்பு, அசாதாரணமான சவுகரியம் மற்றும் வேடிக்கையான டிரைவ் பண்புகள் தவிர மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் சிறந்த கையாளுதல் ஆகியவற்றிற்கு இணக்கமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.41.70 லட்சங்கள்...!

புதிய காம்ரி ஹைப்ரீட் காரின் பேட்டரிக்கு 8 வருட (அ) 1.60 லட்ச கிமீ (எது முதலில் வருகிறதோ) உத்தரவாதத்தை டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் செடான் காருக்கான முன்பதிவுகள் தற்போது முதல் திறக்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இணையம் வாயிலாகவும் அல்லது அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் மையம் வாயிலாகவும் புதிய காம்ரி ஹைப்ரீட் செடான் காரை முன்பதிவு செய்யலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor Launches the New Camry Hybrid.
Story first published: Wednesday, January 12, 2022, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X