மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றான கேம்ரி ஹைபிரிட் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

டொயோட்டா இந்தியா (Toyota) நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வரும் அதன் தயாரிப்புகளின் (கார் மாடல்களின்) எண்ணிக்கையை உயர்த்த இருக்கின்றது. புதிய கேம்ரி ஹைபிரிட் வசதிக் கொண்ட காரை களமிறக்குவதன் வாயிலாக இந்தியாவிற்கான கார் மாடல்களின் எண்ணிக்கையை உயர்த்த இருக்கின்றது, டொயோட்டா.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட் கேம்ரி ஹைபிரிட் வசதிக் கொண்ட காரையே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் மிக விரைவில் அரங்கேற இருக்கின்றது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஓர் வீடியோவை டொயோட்டா அதன் சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் காரை பெல்டா எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், மிக மிக விரைவில் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிய மாடலாக கேம்ரியை டொயோட்டா இணைத்திருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட இந்த செடான் ரக கார் அப்டேட்டாக பல அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. காஸ்மெட்டிக் விஷயத்தில் மிக பெரிய மாற்றத்தை அது பெற்றிருக்கின்றது. இதனால், முற்றிலும் ஓர் ஸ்போர்ட்ஸ் வாகனத்தைப் போல் கேம்ரி காட்சியளிக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் வி வடிவிலான க்ரில் கருப்பு நிறத்திலும், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், புதிய தோற்றத்திலான முன் பக்க பம்பர், 18 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள், வட்ட வடிவ பனி மின் விளக்கு மற்றும் பல ஏராளமான அம்சங்களை டொயோட்டா கேம்ரி பெற்றிருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா கேம்ரி காரின் உட்பகுதியிலும் லேசான மாற்றங்கள் காணப்படுகின்றன. 9 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஒய் வடிவ ஏசி துவாரங்கள், பெரிய கோப்பை தாங்கிகள், கைகளுக்கு ஓய்வளிக்கும் பேட்கள் என எக்கசக்க அம்சங்கள் இதன் உட்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

எஞ்ஜினை பொருத்த வரை டொயோட்டா கேம்ரி காரில் 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைபிரிட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினுடன் தானாக சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட ஹைபிரிட் மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

இவ்விரு மோட்டார்களும் இணைந்து 215 பிஎச்பி பவரை வெளியேற்றும். இத்துடன், 6 ஸ்பீடு சிவிடி டிரான்ஸ்மிஷன் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்ட இருக்கின்றது. இதுமாதிரியான பற்பல சிறப்பு வசதிகளுடனேயே இந்தியாவின் செடான் ரக வாகன சந்தையை ஓர் கை பார்க்க வர இருக்கின்றது டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார்.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் அண்மையில் அதன் இரு முக்கிய கார் மாடல்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகிய இரு எஸ்யூவி கார் மாடல்களின் விலையையே நிறுவனம் அதிரடியாக உயர்த்தியது. ரூ. 1.1 லட்சம் வரையில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் விலையிலும், ரூ. 33 ஆயிரம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் விலையிலும் உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது கேம்ரி ஹைபிரிட் கார்... சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்த டொயோட்டா!

கடந்த வருடத்தின் இறுதியில் இந்நிறுவனம் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே புத்தாண்டு தொடங்கிய மிக விரைவில் புதிய விலையை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரிலும் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வித எஞ்ஜின் தேர்வுகளை விற்பனைக்கு வழங்குகின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2022 toyota camry hybrid teased india launch soon
Story first published: Saturday, January 8, 2022, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X