ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

டொயோட்டாவின் சமீபத்திய அறிமுகமான க்ளான்ஸாவின் முதல் தொகுப்பு டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

புதிய மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சுஸுகியின் கூட்டணி நிறுவனமான டொயோட்டாவும் தனது க்ளான்ஸாவை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனாக க்ளான்ஸா விளங்கினாலும், அதன் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்து பெரிய அளவில் வேறுப்படும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

அறிமுகத்தை தொடர்ந்து புதிய க்ளான்ஸாவின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரின் முதல் தொகுப்பு டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆகாஷ் சஹார் என்கிற யுடியூப் சேனலின் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தைடய துவங்கியுள்ளதால், சில டீலர்ஷிப் மையங்களில் புதிய க்ளான்ஸாவை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், மாருதி பலேனோவிற்கும், டொயோட்டா க்ளான்ஸாவிற்கும் இடையேயான வேறுப்பாடுகள் அதிகரித்துள்ளன. பரிமாண அளவுகளில் இவை இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், 2022 க்ளான்ஸா தற்போது திருத்தப்பட்ட ஃபாக் விளக்குடன் வித்தியாசமான வடிவில் பம்பரை பெற்றுள்ளது.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

அதேபோல் எல்இடி டிஆர்எல்-களும் பலேனோ உடன் ஒப்பிடுகையில் க்ளான்ஸாவில் வித்தியாசமானதாக உள்ளன. உட்புற தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், பலேனோ ஃபேஸ்லிஃப்ட் & க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே உள்ளன. ஆனால் க்ளான்ஸா மாடலில் கருப்பு & பழுப்பு என வித்தியாசமான இரட்டை-நிற டோனில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

2022 க்ளான்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.39 லட்சங்களில் (இ வேரியண்ட்) இருந்து ரூ.9.69 லட்சங்கள் (வி வேரியண்ட்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் விலைகள் 2022 மாருதி பலேனோவை காட்டிலும் ரூ.4,000இல் இருந்து ரூ.20,000 வரையில் அதிகமாக உள்ளன. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை தொடர்ந்து பலேனோவும், க்ளான்ஸாவும் விரைவில் புதியதாக சிஎன்ஜி தேர்வையும் பெறவுள்ளன.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

இதில் பலேனோ சிஎன்ஜி காரின் சோதனை மாதிரி ஏற்கனவே சோதனை ஓட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. க்ளான்ஸா சிஎன்ஜி கார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இணையத்தில் வெளியாகியுள்ள விபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விபரங்களின்படி பார்க்கும்போது க்ளான்ஸாவின் புதிய சிஎன்ஜி வெர்சன் ஆனது 'இ-சிஎன்ஜி' என அழைக்கப்படும்.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

இதன் மைலேஜ் அளவு 25kmpl ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு ஆனது கிலோகிராம்களிலேயே அளவிடப்படுகின்றன. ஆதலால் 25kmpl என்பது கிலோகிராமிற்கு மாற்றப்பட்டால், க்ளான்ஸா சிஎன்ஜி காரின் மைலேஜ் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அளவில் பெரிய எர்டிகா சிஎன்ஜி காரின் மைலேஜ் அளவே 26kmpkg ஆக உள்ளது.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

ஆதலால் நிச்சயமாக பலேனோ & க்ளான்ஸா மாடல்களின் சிஎன்ஜி வெர்சன்களை 25kmpkg அதிகமாகவே எதிர்பார்க்கலாம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு க்ளான்ஸா சிஎன்ஜி காரிலும் வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினே வழங்கப்படும். ஆனால் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள், மற்ற சிஎன்ஜி வாகனங்களை போல் மைலேஜை அதிகரிக்க வேண்டி சற்று குறையும்.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே பலேனோ சிஎன்ஜி & க்ளான்ஸா சிஎன்ஜி கார்களில் எதிர்பார்க்க முடியும். ஏஎம்டி போன்ற ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை இந்த சிஎன்ஜி கார்களில் எதிர்பார்க்க முடியாது. தோற்றத்தில் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைதான் புதிய பலேனோ சிஎன்ஜி & க்ளான்ஸா சிஎன்ஜி கார்கள் ஒத்து காணப்படும். இருப்பினும் கூடுதலாக காரை சுற்றிலும் இ-சிஎன்ஜி முத்திரைகள் வழங்கப்படும்.

ஷோரூம்களில் 2022 டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார்!! டெலிவிரி விரைவில் துவக்கம்

விற்பனையில் டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி காருக்கு மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி மட்டுமே ஆரம்பத்தில் போட்டியாக விளங்கும். ஏனெனில் இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ் என தற்போதைக்கு எந்தவொரு மாடலும் சிஎன்ஜி தேர்வை பெறுவதில்லை. ஆனால் விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காருக்கு சிஎன்ஜி தேர்வை வழங்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2022, 11:40 [IST]
English summary
2022 toyota glanza arrives at dealer showroom walkaround video
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+