டாடாவிற்கு தலைவலி... 2022 டொயோட்டா க்ளான்சா விற்பனைக்கு அறிமுகம்... இந்த விலைக்கு சூப்பரான காரா இருக்கே!
2022 டொயோட்டா க்ளான்சா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம், மாருதி சுஸுகி கார்களை தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய 2 கார்களும் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டொயோட்டா பிராண்டில் அவை முறையே க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டொயோட்டா க்ளான்சா காரின் மேம்படுத்தப்பட்ட 2022 மாடல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 மாருதி சுஸுகி பலேனோ சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதை தொடர்ந்து 2022 டொயோட்டா க்ளான்சா காரும் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 டொயோட்டா க்ளான்சா கார் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 2022 க்ளான்சா காரில், டொயோட்டா நிறுவனம் வேரியண்ட்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் பழைய மாடல், 2 ட்ரிம்களில் (Trims) மட்டுமே கிடைத்து வந்தது.

ஆனால் டொயோட்டா க்ளான்சா காரின் 2022 மாடலானது, ஒட்டுமொத்தமாக 4 ட்ரிம்கள் மற்றும் 7 வேரியண்ட்களில் கிடைக்கும். மாருதி சுஸுகி பலேனோவுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறு விதமான முன் பகுதியை 2022 டொயோட்டா க்ளான்சா பெற்றுள்ளது. இது டொயோட்டா குடும்பத்தை சேர்ந்த கார் என்பதை உணர்த்தும் வகையில், புதிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

ஹெட்லேம்ப்களையும் கூட டொயோட்டா நிறுவனம் 'அப்டேட்' செய்துள்ளது. 2022 டொயோட்டா க்ளான்சா காரின் ஹெட்லேம்ப்கள் 'L' வடிவ பகல் நேர விளக்குகளை பெற்றுள்ளது. இது இந்த காருக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. அத்துடன் 2022 க்ளான்சா காரில் டொயோட்டா நிறுவனம் புதிய அலாய் வீல்களையும் வழங்கியுள்ளது.

இதுதவிர 2022 டொயோட்டா க்ளான்சா காரின் பின் பகுதியில் புதிய ஸ்பிளிட் டெயில் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மாருதி சுஸுகி பலேனோவை போன்றே உள்ளது. இதை தவிர டிசைனில் பெரிய அளவில் வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. உட்புறத்தை பொறுத்தவரை, மாருதி சுஸுகி பலேனோ காரை போன்றே 2022 டொயோட்டா க்ளான்சா காரும் இருக்கிறது.

ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் கூட, வசதிகளின் பட்டியல் ஒன்றாகவே உள்ளது. 2022 டொயோட்டா க்ளான்சா ட்யூயல்-டோன் டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளை பெற்றுள்ளது. அத்துடன் புதிய க்ளைமேட் கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 2022 டொயோட்டா க்ளான்சா காரானது, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில், 2 அனலாக் டயல்கள் மற்றும் எம்ஐடி டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது.

இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளும் 2022 டொயோட்டா க்ளான்சா காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 9.0 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டொயோட்டா ஐ-கனெக்ட் (Toyota i-Connect) வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு ரிமோட் வசதிகளை இது வழங்குகிறது. அதே சமயம் மாருதி சுஸுகி பலேனோவை போல், 2022 டொயோட்டா க்ளான்ச காரும், அதே 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளுடன், 2022 டொயோட்டா க்ளான்சா கிடைக்கும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு 2022 டொயோட்டா க்ளான்சா விற்பனையில் சவால் அளிக்கும். அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ காருடனும், 2022 டொயோட்டா க்ளான்சா விற்பனையில் போட்டியிடும். புதிய மாடலின் வருகையால், டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய 2 கார்களின் 2022 மாடல்களும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2022 டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை 6,39,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9,69,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

வேரியண்ட்கள் வாரியான விரிவான விலை விபரத்தை மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். 2022 டொயோட்டா க்ளான்சா கார், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும். வரும் காலங்களில், டொயோட்டா நிறுவனம் இன்னும் பல்வேறு மாருதி சுஸுகி கார்களை தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








