டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

2022 டொயோட்டா க்ளான்சா காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த கூட்டணியின் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ காரை க்ளான்சா என்ற பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா காரை அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த சூழலில், 2022 மாருதி சுஸுகி பலேனோ கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே டொயோட்டா நிறுவனமும் 2022 க்ளான்சா காரை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

2022 டொயோட்டா க்ளான்சா (2022 Toyota Glanza) கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 15ம் தேதி (March 15) டொயோட்டா க்ளான்சா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஒரு சில டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பலேனோ காரில் ஏராளமான அப்டேட்களை வழங்கியுள்ளது. எனவே 2022 டொயோட்டா க்ளான்சா காரிலும் ஏராளமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரை முன் பகுதியில், புதிய ஹெட்லேம்ப் யூனிட்கள், அப்டேட் செய்யப்பட்ட பகல் நேர விளக்குகள், ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

அத்துடன் டொயோட்டா பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும். பின் பகுதியை பொறுத்தவரையில், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2022 டொயோட்டா க்ளான்சா காரின் உட்புறத்திலும் நிறைய மாற்றங்களை நாம் காண்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவை 2022 டொயோட்டா க்ளான்சா பெறலாம்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

மேலும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டேஷ்போர்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கலாம். இதுதவிர புதிய ஏசி வெண்ட்கள் உள்பட இன்னும் பல்வேறு வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

2022 டொயோட்டா க்ளான்சா காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. 2022 பலேனோ காரின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் மிக கடுமையாக உழைத்துள்ளது. இந்த மாற்றங்கள் 2022 டொயோட்டா க்ளான்சா காரிலும் எதிரொலிக்கலாம்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

பாதுகாப்பை மேம்படுத்துவது என்பது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்குமே உதவி செய்யும் கூடுதலாக நிறைய வாடிக்கையாளர்கள் இந்த 2 நிறுவனங்களின் ஷோரூம்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளன. செயல்திறனை பொறுத்தவரை, புதிய டொயோட்டா க்ளான்சா காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 2022 டொயோட்டா க்ளான்சா காரானது, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் தேர்வுகளை பெறலாம். தற்போது உள்ள மாடலை காட்டிலும், 2022 டொயோட்டா க்ளான்சா காரின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

ஆனால் 2022 டொயோட்டா க்ளான்சா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் மார்ச் 15ம் தேதியன்றுதான் விலை உள்பட அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். முன்பு போலவே, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன், 2022 டொயோட்டா க்ளான்சா கார் போட்டியிடும்.

டாடாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணி... வர்ற 15ம் தேதி தரமான சம்பவம் இருக்கு!

அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ காருக்கும் இது விற்பனையில் போட்டியை வழங்கும். பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டு வருவதை மனதில் கொண்டுதான் மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பலேனோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அப்டேட் செய்யப்பட்ட க்ளான்சா காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 3, 2022, 13:21 [IST]
English summary
2022 toyota glanza official india launch date announced check details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+