மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான 2022 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பாதுகாப்பு மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் சோதனைகளின் முடிவுகளை பற்றி வீடியோவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

ஆஸ்திரேலிய கண்டத்தில் விற்பனை செய்யப்படும் 2022 லேண்ட் க்ரூஸரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது. இதனால் இந்த பகுதிகளிலும் மேற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ளதை போல் லேண்ட் க்ரூஸர் பிரபலமான எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

கம்பீரமான தோற்றம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும், பயணிகளின் பாதுகாப்பிலும் லேண்ட் க்ரூஸர் சிறந்ததாக வடிவமைக்கப்படுவது தற்போது ஆஸ்திரேலியன் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (ANCAP) மோதல் சோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஏனெனில் இந்த சோதனைகளில் புதிய 2022 லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான பாதுகாப்பில் 100-க்கு 89 சதவீதம் புதிய லேண்ட் க்ரூஸருக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பில் 88%-ஐ இந்த டொயோட்டா எஸ்யூவி பெற்றுள்ளது. அதேபோல் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பிலும் சிறப்பான மதிப்பெண்களை இந்த எஸ்யூவி பதிவு செய்துள்ளது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் இந்த காருக்கு 81% மதிப்பெண்ணாக வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலிய என்சிஏபி மோதல் சோதனைகளில் லேண்ட் க்ரூஸர் 77 சதவீத மதிப்பெண்ணை சொந்தமாக்கியுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இந்த மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2022 லேண்ட் க்ரூஸர் ஆகும்.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

இந்த எஸ்யூவி காரில் பல எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், ஒரே பாதையை தொடர உதவி, பாதை மாறுவதை எச்சரிப்பான் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பயணிகளின் பாதுகாப்பிற்கு டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது. புதிய லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி உலகளவில் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியீடு செய்யப்பட்டது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

ஆஸ்திரேலியாவை அடுத்து அமெரிக்காவிலும், மற்ற நாட்டு சந்தைகளிலும் வரும் மாதங்களில் 2022 லேண்ட் க்ரூஸர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டொயோட்டா எஸ்யூவி காரில் இரட்டை-டர்போ 3.5 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 409 எச்பி மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

முந்தைய 2021 வெர்சன் உடன் ஒப்பிடுகையில், 2022 லேண்ட் க்ரூஸரின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உட்புறம் கேபின் கவனிக்கத்தக்க அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ்போர்டில் 9-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதனை காட்டிலும் பெரிய 12.3 இன்ச் திரையினையும் கூடுதல் தேர்வாக இந்த எஸ்யூவி காரில் பெறலாம்.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

அத்துடன் வயர் இல்லா போன் சார்ஜிங், HUD மற்றும் 360-கோண கேமிரா போன்றவையும் லேண்ட் க்ரூஸரில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான டொயொட்டா கார்களுள் லேண்ட் க்ரூஸரும் ஒன்று என்றால், அது மிகையில்லை. டொயோட்டா அமெரிக்காவில் லேண்ட் க்ரூஸர் காரை வாங்குபவர்களை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

தேவைக்கும், சப்ளைக்கும் பொருந்தாத காரணத்தால், வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்கி, அதிக விலைக்கு விற்கும் நிகழ்வுகளை தடுக்க இவ்வாறான நடவடிக்கையை டொயோட்டா மேற்கொள்ள உள்ளதாம். மற்றொரு காரணி என்னவென்றால், வலுவான 4x4 திறன்களை கொண்டதால் லேண்ட் க்ரூஸர் உலகின் பல்வேறு நாடுகளில் பலர் தேர்ந்தெடுக்கக்கூடிய வாகனமாக விளங்குகிறது. அதேநேரம் இது தீய நோக்கங்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை அள்ளிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்!! கம்பீரமானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட!

இதை களையெடுக்க லேண்ட் க்ரூஸரை வாங்குவோரின் அடையாளங்களை சேகரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த எஸ்யூவி கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேண்ட் க்ரூஸரை நம் இந்தியாவிலும் விற்பனை செய்ய டொயோட்டா பணியாற்றி வருகிறது. நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், லேண்ட் க்ரூஸர் இந்தியாவில் சிபியூ முறையிலேயே விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2022 toyota land cruiser gets 5 star safety rating in ancap crash test details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X