இனி யூகங்களுக்கு இடமில்லை... 2023 ஹூண்டாய் பாலிசேட் கார் முழுமையாக வெளியீடு... செம சூப்பரா இருக்கே!
2023 ஹூண்டாய் பாலிசேட் 7 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி கார் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2023 ஹூண்டாய் பாலிசேட் (2023 Hyundai Palisade) கார் தற்போது முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபுல்-சைஸ் 7 சீட்டர் எஸ்யூவி, நியூ யார்க் சர்வதேச மோட்டார் ஷோ-வில் (New York International Motor Show) வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் பாலிசேட் 7 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ஆரம்பத்தில், தென் கொரிய சந்தையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்த 7 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி சர்வதேச சந்தைகளில் விற்பனையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நிறைவு செய்து விட்டது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் 2023 பாலிசேட் 7 சீட்டர் எஸ்யூவி காரின் டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது நியூ யார்க் சர்வதேச மோட்டார் ஷோ-வில், 2023 பாலிசேட் காரை முழுவதுமாக வெளியிட்டுள்ளது.

எனவே இனி யூகங்களுக்கு இடமில்லை. 2023 ஹூண்டாய் பாலிசேட் எஸ்யூவி காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவந்து விட்டது. இதன்படி வெளிப்புறத்தில், புதிய முன் பக்க பம்பரும், ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பாராமெட்ரிக் க்ரில் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பழைய மாடலில் பகல் நேர விளக்குகள் செங்குத்தாக வழங்கப்பட்டிருக்கும். புதிய மாடலிலும் அதே டிசைன் அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, புத்தம் புதிய மல்டி ஸ்போக் 20 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், இந்த காரை பீரிமியமாக காட்டுகின்றன. டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பழைய மாடலை காட்டிலும் புதிய மாடல் 'ஷார்ப்' ஆக உள்ளது.

உட்புறத்தை பொறுத்தவரையில், இரண்டு 12.3 இன்ச் திரைகள், புதிய ஸ்டியரிங் வீல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டேஷ்போர்டின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய எர்கோ-மோஷன் இருக்கைகளையும் புதிய ஹூண்டாய் பாலிசேட் பெற்றுள்ளது. இந்த மாற்றங்கள், முன்பை காட்டிலும் இந்த காரை பிரீமியம் ஆகவும், அதிநவீனமான ஒன்றாகவும் காட்டுகின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் பாலிசேட் காரில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, இன்-கார் ஹாட்ஸ்பாட், யூஎஸ்பி-சி சார்ஜிங் ஸ்லாட்கள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மூன்று வரிசைகளிலும் ஆப்ஷனல் ஹீட்டட் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள், இரண்டாவது வரிசையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2023 கியா டெலுரைட் எஸ்யூவி (2023 Kia Telluride SUV) காரை போலவே, 2023 ஹூண்டாய் பாலிசேட் எஸ்யூவி காரிலும், அடாஸ் தொழில்நுட்பம் (ADAS - Advanced Driver Assistance Systems)
ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 3.8 லிட்டர், Atkinson Cycle, Dual CVVT, naturally-aspirated, V6 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 291 பிஹெச்பி பவரையும், 335 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இருப்பினும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சந்தைகளில், 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வு ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197.3 பிஹெச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயம் 2023 ஹூண்டாய் பாலிசேட் எஸ்யூவி காரில், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். அத்துடன் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகளில், 2023 ஹூண்டாய் பாலிசேட் எஸ்யூவி கிடைக்கும். 2023 ஹூண்டாய் பாலிசேட் 7 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி, முன்பை காட்டிலும் தற்போது கவர்ச்சிகரமாகவும், அதிநவீனமாகவும் மாறியுள்ளது.

புதிதாக செய்யப்பட்டுள்ள அப்டேட்கள், கவர்ச்சியும், அதிநவீனமும் கலந்த கலவையாக இந்த காரை மாற்றியுள்ளன. ஹூண்டாய் பாலிசேட் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு இந்த அப்டேட்கள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால், ஹூண்டாய் நிறுவனம் சற்று தடுமாறி வரும் நிலையில், 2023 பாலிசேட் கார் வெளியிடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications