கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்! மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகே.. இரண்டிலும் ஓடும்!

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் காரை கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் குறித்த கூடுதல் தகவலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

பிரபல கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), அதன் 2023 ஸ்போர்டேஜ் பிஎச்இவி (Sportage Plug-in hybrid electric vehicles) காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் வருகை நிறுவனத்தின் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் கார் பிரிவிற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

கடந்த ஆண்டே ஸ்போர்டேஜ் கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை அமெரிக்க சந்தையில் கியா நிறுவனம் வெளியீடு செய்தது. இந்த நிலையில் தற்போது இக்-கார் மாடலின் பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது வழக்கமான ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

ஸ்போர்டேஜ் பிஎச்இவி (Plug-in hybrid electric vehicles), எக்ஸ்-லைன் மற்றும் எக்ஸ்-லைன் பிரெஸ்டீஜ் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை இரண்டிற்கும் இடையில் கணிசமான வித்தியாசங்கள் தென்படுகின்றன. சிறப்பம்சங்களிலேயே இரு ட்ரிம்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் தென்படுகின்றன.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

ஸ்போர்டேஜ் பிஎச்இவி காரில் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 177 எச்பி திறனை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 66.9 kW எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டாருக்குத் தேவையான மின்சார திறனை வழங்குவதற்காக 13.8 kWh லித்தியம்-பாலிமர் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 51 கிமீ கூடுதலாக பயணிக்க முடியும். ஆம், இந்த சிறப்பு வசதியையே கியா ஸ்போர்டேஜ் பிஎச்இவி கார் பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில் இந்த கார் பெட்ரோலாலும் இயங்கும் என்பது கவனிக்கதகுந்தது. இதற்காகவே 1.6 லிட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

ஆகையால், பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் காராக ஸ்போர்டேஜ் பிஎச்இவி இருக்கின்றது. இந்த காரை சார்ஜ் செய்ய லெவல் 2 ரக மின்சார சார்ஜரே போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய சிறப்பு வசதிகளை பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே கியா ஸ்போர்டேஜ் மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

இதுமட்டுமின்றி இந்த காரை இன்னும் பல மடங்கு சிறப்பான வாகனமாக காட்டுவதற்காக பல்வேறு சொகுசு மற்றும் அதி-நவீன அம்சங்களை நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. அந்தவகையில் லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஃபார்வர்டு கொல்லிசன் அவாய்டன்ஸ், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

கியா ஸ்போர்டேஜ் எக்ஸ்-லைன் பிரெஸ்டீஜ் ட்ரிம் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதில், ஹர்மேன் கர்டோன் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்டியரிங் வீல் பன்முக கன்ட்ரோல்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

இதுபோன்று அதிக சிறப்புமிக்க தொழில்நுட்ப அம்சங்களை மட்டுமே ஸ்போர்டேஜ் காரில் கியா வழங்கவில்லை. அக்காரை அதிக கவர்ச்சியான காராகவும் உருவாக்கியிருக்கின்றது. 19 இன்ச் அளவுள்ள கருப்பு நிற அலாய் வீல்கள், குளாஸ்ஸி கருப்பு நிற பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவை மிகவும் ஸ்டைலானதாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

கியா ஸ்போர்டேஜ் பிளக்-இன் ஹைபிரிட் கார் அறிமுகம்... மின்சாரம், பெட்ரோல் எது கிடைச்சாலும் ஓகேதான்... இரண்டிலும் ஓடும்!

இதுமட்டுமின்றி, ஜன்னலைச் சுற்றிய பகுதி, ரூஃப் ரேக் மற்றும் பின் பக்க பம்பர் ஆகியவற்றில் குரோம் சேடின் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றினால் கியா ஸ்போர்டேஜ் பிஎச்இவி கார் மிகவும் கவர்ச்சியான ஓர் தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. மிகத் தெளிவாகக் கூற வேண்டுமானால் விலையுயர்வான ஆடம்பர கார்களுக்கு இணையானதாக இது காட்சியளிக்கின்றது.

குறிப்பு: உதாரணத்திற்காக வழக்கமான ஸ்போர்டேஜ் மாடலின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2022, 15:00 [IST]
English summary
2023 kia sportage phev comes with 51 km electric only range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+