பாக்க தமாத்தோண்டு இருக்கு இந்த காருல போயி 27 பேரு ஏறியிருக்காங்களா... நம்பவே முடியல... வீடியோ!
ஒரு காருல இரண்டு அல்லது நான்கு பேர் போக முடியும் அல்லது சற்று பெரிய காராக இருந்தால் அதிகபட்சம் 9 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால், இங்கு ஓர் காரில் 27 பேர் வரை ஏறியிருக்கின்றனர். இந்நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மூன்று நிமிட நீள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் வரிசையாக நிற்கும் இளம் பெண்கள் ஒவ்வொருவராக ஒற்றைக் காருக்குள் நுழையும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் 27 பெண்கள் அந்த காருக்குள் நுழைவதை நம்மால் காண முடிகின்றது.

மினி கூப்பர் கார் இது ஓர் மிகச் சிறிய ஹேட்ச்பேக் ரக காராகும். வழக்கமான அளவுடைய இந்த காரிலேயே 27 பெண்கள் ஒரே நேரத்தில் உள் நுழைந்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக வேறு எந்த ஹேட்ச்பேக் காரிலும் இதுபோன்று அதிகளவு எண்ணிக்கையில் மனிதர்கள் திணிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவேதான் இந்த செயல் தற்போது கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 'கின்னஸ் உலக சாதனை அமைப்பு' அவ்வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இதுவே தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கின்னஸ் உலக சாதனை டேனியல் மேனார்ட் என்பவரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த நிகழ்வு 18 மே 2014-லேயே செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சாகசதத்தையே தற்போது கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி இளம் பெண்கள் 27 பேர் ஒரே சமயத்தில் காருக்குள் நுழைந்திருக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தும், சிலர் படுத்தும், ஒரு சிலர் தங்களது கை, கால்களை மடக்கிக் கொண்டு காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் தங்களைத் திணித்தும் ஏறியிருக்கின்றனர்.

இதனாலயே ஒட்டுமொத்தமாக 27 பேரால் அச்சிறிய காரில் ஏற முடிந்திருக்கின்றது. மேலும், இந்த செயலுக்காகவே கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் அது இடம் பிடித்திருக்கின்றது. 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மினி கூப்பர் அந்தளவு பெரிய வாகனம் இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 1407 மிமீ உயரம், 1683 மிமீ அகலம், 3699 மிமீ நீளம் ஆகிய அளவுகளிலேயே கூப்பர் காரை மினி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இம்மினி கார் ஓர் சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த விலையுயர்ந்த காராகும். இந்க கார் தற்போதைய நிலவரப்படி பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தற்போதைய நிலவரப்படி ரூ. 40 லட்சம் தொடங்கி ரூ. 50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனம் இதுவென்பதால் இந்த உச்ச விலையில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மினி நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்துக்கும் அதிகமான கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், நான்கு கார் மாடல்கள் ஹேட்ச்பேக் கேட்டகரியிலும், ஒன்று கன்வெர்டபிள் கேட்டகரியிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மினி நிறுவனம் தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. 1996ம் ஆண்டே பிஎம்டபிள்யூ நிறுவனம் மினி நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இந்த நிறுவனம் கையகப்படுத்துவதற்கு முன்னர் வரை ஆஸ்டின் மினி மற்றும் மோரிஸ் மினி என இரு பிராண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தது.
How many volunteers can squeeze into this regular-sized Mini Cooper? 😬 pic.twitter.com/wXf4Tihv87
— Guinness World Records (GWR) September 5, 2022
பிஎம்டபிள்யூவின் கையகப்படுத்தலைத் தொடர்ந்து தற்போது மினி எனும் ஒற்றை பிராண்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியிலேயே நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. நடிகர் சிம்புவிடம்கூட மினி கூப்பர் கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இதனை அவரது அம்மாவே சிம்புவுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications