3 நாட்களில் இந்தியாவில் 3 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு... நாளைக்கு ஒன்னு நாளை மறுநாள் ஒன்னுனு அறிமுகமாகபோது
இந்தியாவில் இன்னும் மூன்றே நாட்களில் அறிமுகமாக இருக்கும் மூன்று புதுமுக கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அடுத்த மூன்று நாட்களில் இந்தியாவில் மூன்று புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி400 இவி, ஹூண்டாய் வென்யூ என் லைன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஆகிய கார்களே அடுத்தடுத்து என மூன்று தினங்களில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. இந்த கார்கள் பற்றிய முழு விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் வென்யூ என் லைன் (Hyundai Venue N Line)
ஹூண்டாய் நிறுவனம் அதன் வென்யூ என் லைன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது வழக்கமான வென்யூ காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆகையால், இக்காருக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஏற்கனவே, இந்த காரை நிறுவனம் வெளியீடு செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே நாளை (செப்டம்பர் 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட காராக இந்த வென்யூ என் லைன் உருவாக்கப்பட்டுள்ளது. தண்டர் ப்ளூ மற்றும் ரெட் அக்செண்டுகளால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், 16 அங்குல அலாய் வீல்கள் காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மோட்டாரை பொருத்தவரை இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் (Citroen C5 Aircross Facelift):
சிட்ரோன் நிறுவனம் அண்மையில் சி3 எனும் மலிவு விலை காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சி5 ஏர்கிராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷன் பெரியளவில் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்த நிலையிலேயே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வாயிலாக இந்த காரின் பக்கம் இந்தியர்களைக் கவர திட்டமிட்டுள்ளது. வரும் 7ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக இந்தியா கொண்டு வரப்பட இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரை உலகளவில் நிறுவனம் வெளியீடு செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

புதுப்பித்தலின் அடிப்படையில் முன் மற்றும் பின் பக்கத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், முன்பக்கத்தின் முழு அகலத்தையும் அலங்கரிக்கும் வகையில் எல்இடி லைட், புதிய சென்டர் கன்சோல் மற்றும் பெரிய 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, இந்த காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது கவனித்தகுந்தது.

இதுமட்டுமின்றி, பாதுகாப்பு அம்சம் விஷயத்திலும் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆக்டீவ் டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் ஆக்டீவ் சேஃப்ட்டி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஹைவே டிரைவர் அசிஸ்ட் சூட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் ஃபார்வார்டு கொலிசன் பிரவென்சன் ஆகிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. அடாஸ் அம்சத்தின் வாயிலாகவே இந்த சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அப்டேட்டுகளின் காரணத்தினால் புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ரூ. 37 லட்சம் தொடங்கி ரூ. 40 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி (Mahindra XUV400 EV)
மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 300 காரை தழுவியே இந்த எக்ஸ்யூவி400 இவி காரை உருவாக்கியிருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும். அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காராக இவ்வாகனத்தை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த காரின் வருகை பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்போதே இதை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா களமிறங்கியிருக்கின்றது.

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக இந்த மின்சார காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த வாகனம் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு இணையான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், முழு சார்ஜில் 400 கிமீ ரேஞ்ஜ் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








