விலை பற்றி கவலை படாமல் இந்திய மக்கள் வாங்கி குவிக்கும் கார் எது? 5 வருசத்துல இவ்வளவு கார் வந்துருச்சா?
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமாக எஸ்யூவி கார்கள் அறிமுகமாகியுள்ளதாகவும், விற்பனையிலும் இந்த ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிக் காணலாம்.

இந்தியாவில் மக்கள் மத்தியில் வாகனங்கள் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது. ஒரு வாகனம் அவரின் அந்தஸ்தை உயர்த்துகிறது. சமூகத்தில் அவர் யார் என்பதைத் தீர்வு செய்யும் விஷயமாக அவர் பயன்படுத்தும் வாகனங்கள் இருக்கிறது. ஒருவர் பொருளாதார ரீதியாக எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அவர் பயன்படுத்தும் வாகனம் வெளிப்படுத்தும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களின் ஒட்டு மொத்த மன நிலையைப் பிரதிபலிக்கும்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏன் தற்போது வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாவது குறைந்த விலை கார்களாவே இருந்தன. ஆனால் இது கடந்த 5 ஆண்டுகளாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியா மக்களின் தற்போது விலையை விடத் தரத்திற்கு முக்கியத்துவம் தரத் துவங்கிவிட்டனர். தரமான ஒரு தயாரிப்பை வாங்கவேண்டும் என்று தான் விரும்புகின்றனர். விலை குறைவாக இருந்தாலும் தரமில்லாத தயாரிப்பு என்றால் அதைத் தவிர்க்க விரும்புகின்றனர்.

அதைப் பிரதிபலிக்கும் விதமாகச் சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 36 விதமான கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். எஸ்யூவி கார்கள் என்பது மார்கெட்டில் ரூ5 லட்சம் துவங்கி ரூ25 லட்சம் வரையிலும் பல்வேறு ரகங்களாக விற்பனையாகிறது.

மார்கெட்டில் குறைந்த விலை கார் என்பது ரூ3 லட்சத்தில் விற்பனையாகிறது. இதிலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இப்படியாக மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் எஸ்யூவி கார்களிலும் டாப் வேரியன்ட் கார்களில்தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. பேஸ் வேரியன்ட்களில் அவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இல்லாததால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் டாப் வேரியன்ட் கார்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

குறிப்பாக சன்ஃரூப் மற்றும் கனெக்டெட்ட கார் தொழிற்நுட்பம் கொண்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளதாம். தாங்கள் வாங்கும் கார்களில் இந்த தொழிற்நுட்ப வசதி எந்த வேரியன்டில் இருக்கிறதோ அந்த வேரியன்டை கேட்டுத் தான் மக்கள் அதிகம் வாங்குகிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இப்படியாக மார்கெட்டில் அதிகமாக எஸ்யூவி கார்கள் விற்பனையாவது ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் விற்பனையை வீழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு மக்கள் பலர் சொந்த வாகனங்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பொது போக்குவரத்தைத் தவிர்க்க விரும்புகின்றனர். இதனால் கார் வாங்கும் மன நிலைக்கு வருகின்றனர். இப்படியாக அவர்கள் அந்த மன நிலைக்கு வரும் போது அவர்கள் தேர்வு செய்யும் கார்களில் பெரும்பாலும் எஸ்யூவி ரக கார்கள் தான் இருக்கிறது.

மாருதி சுஸூகி நிறுவனத்தின்
இந்திய சீனியர் விற்பனை எக்சிக்யூட்டிவ் இயக்குநர் இது குறித்து கூறும் போது மார்கெட்டில் 19 சதவீதமாக இருந்த எஸ்யூவி கார்களின் பங்கு கடந்த 2021-22 நிதியாண்டில் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எனக் கூறினார். மேலும் முதலில் நாம் குறிப்பிட்ட அறிக்கையில் எஸ்யூவி கார்களிலேயே என்டரி லெவல் எஸ்யூவிகளாக காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கே அதிக மவுசு கிடைக்கிறது என்றும் கடந்தாண்டு மட்டும் 30.68 லட்சம்
எஸ்யூவி கார்கள் மொத்தம் விற்பனையானதில் என்டரி லெவல் எஸ்யூவிகளின் எண்ணிக்கை மட்டும் 6.52 லட்சம் எனக் கூறியுள்ளார்.

தற்போது எஸ்யூவிகார்கள் மீது மக்களுக்கு உள்ள மவுசு அடுத்த சில ஆண்டுகளுக்கு மக்கள் குறையாது என்று மட்டும் தெளிவாகிறது. இந்த ரக கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் சில ஆண்டுகளில் சாலைகளில் ஓடும் பாதிக்கும் மேற்பட்ட கார்கள் எஸ்யூவி ரக கார்களாக தான் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த எஸ்யூவி ரக கார்களின் உங்களுக்குப் பிடித்த கார் எது? நீங்கள் எஸ்யூவி காரை வாங்குவதாக இருந்தால் எந்த காரை வாங்குவீர்கள்? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








