சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை கியா டீலர்ஷிப் ஒன்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கியா கேரன்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு இந்த காரை டெலிவரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

ஐதராபாத் (Hyderabad) நகரில் உள்ள கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஒன்று ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்து அசத்தியுள்ளது. வீஹான் கியா (Vihaan Kia) என்ற டீலர்ஷிப்தான் இந்த பிரம்மாண்ட டெலிவரி நிகழ்ச்சியை தற்போது நடத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி கியா கேரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றன.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

கியா கேரன்ஸ் காருக்கு 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. கேரன்ஸ் காருக்கு கியா நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 8.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிட்டு வருகிறது. அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்களுக்கும் கியா கேரன்ஸ் விற்பனையில் சவால் அளித்து கொண்டுள்ளது.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

கியா நிறுவனத்தின் லைன்-அப்பில் கார்னிவல் காருக்கு கீழாக கேரன்ஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கியா கேரன்ஸ் காருக்கு தற்போதைய நிலையில் 14 முதல் 49 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பவர்ட்ரெயின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் காம்பினேஷனை பொறுத்து கியா கேரன்ஸ் காருக்கான காத்திருப்பு காலம் மாறுபடும்.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

கியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் கேரன்ஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், அனந்த்ப்பூர் தொழிற்சாலையில், மூன்றாவது ஷிஃப்ட்டை தொடங்குவதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

இதன் மூலம் கேரன்ஸ் காருக்கான காத்திருப்பு காலத்தை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கியா கேரன்ஸ் கார் மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

அதே நேரத்தில் 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

கியா கேரன்ஸ் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சிங்கிள்-பேன் சன்ரூஃப், டிஜிட்டல் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை. அத்துடன் கியா கேரன்ஸ் காரில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

பல்வேறு இன்ஜின் தேர்வுகள், ஏராளமான வசதிகள், கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால்தான் கியா கேரன்ஸ் காருக்கு இந்திய சந்தையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. கேரன்ஸ் கார் கியா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பரான விலை... ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்த கியா டீலர்... இன்னோவா க்ரிஸ்ட்டா என்ன ஆகப்போகுதோ?

இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் களமிறக்கியுள்ள 4வது கார் ஆகும். முன்னதாக செல்டோஸ், சொனெட் ஆகிய எஸ்யூவி கார்களையும், கார்னிவல் எம்பிவி காரையும் கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2022, 14:59 [IST]
English summary
40 kia carens cars delivered in a day check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+