நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

நடப்பாண்டு ஜூன் மாதம் இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் காத்து கிடந்த ஏராளமான புதிய கார்கள் கடந்த ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் ஒரு முறை சுருக்கமாக திரும்பி பார்க்கலாம்.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

கியா இவி6 (Kia EV6)

இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் இது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 59.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், 77.4kWh பேட்டரி தொகுப்பும், 2 எலெக்ட்ரிக் மோட்டார்களும் உள்ளன. இது ரியர் வீல் டிரைவ் மாடலில் 223 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் ஆல் வீல் டிரைவ் மாடலில் 320.5 பிஹெச்பி பவரையும், 605 என்எம் டார்க் திறனையும் இது உருவாக்கும்.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் சிபியூ வழியில் இந்தியாவிற்கு வருகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால் இந்திய சந்தைக்கு 100 இவி6 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தற்போதைய நிலையில் கியா நிறுவனம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus)

இது மிட்-சைஸ் செடான் கார் ஆகும். 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் வழங்கப்படுகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை 11.21 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N)

11.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன் மட்டுமல்லாது, அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போது டெஸ்ட் டிரைவ் பணிகள் நடந்து வரும் நிலையில், முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜூலை 30ம் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

அதற்கு முன்னதாக ஸ்கார்பியோ-என் காரின் ஆட்டோமேட்டிக் மற்றும் 4x4 வேரியண்ட்களின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் வரும் ஜூலை 21ம் தேதிதான் அறிவிக்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue)

7.53 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், ஹூண்டாய் வெனியூ காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஏர் ப்யூரிஃபையர் என ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

ஹூண்டாய் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை போல், அதே செக்மெண்ட்டை சேர்ந்த மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் 2022 ஃபேஸ்லிஃப்ட் மாடலும் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

இதில், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும், புதிய 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

நிறைய பேர் நெனச்சது நடந்திருச்சு... போன ஜூன் மாசத்தை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ காருடன் மட்டுமல்லாது, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், கியா சொனெட் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுக்கும் புதிய 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனையில் மிக கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 12, 2022, 18:22 [IST]
English summary
5 best cars that launched in june 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+