பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

இந்தியாவில் அடாஸ் வசதியுடன் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. பாதுகாப்பை வழங்குவதுடன், கார் ஓட்டுவதை எளிமையாக்கிறது என்பதாலும் அடாஸ் தொழில்நுட்பத்திற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே அடாஸ் தொழில்நுட்ப வசதியுடன் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift)

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சோதனை செய்து வருகிறது. தோற்றத்தில் மாற்றம் செய்யப்படுவதுடன், பல்வேறு புதிய வசதிகளையும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் பெறவுள்ளது. இதில், அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

ஆனால் ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மாற்றங்களை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது உள்ள மாடலில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படலாம். புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா/அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்கள் (Hyundai Creta/Alcazar Facelifts)

இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமான ஹூண்டாய் கார்களாக க்ரெட்டா மற்றும் அல்கஸார் திகழ்கின்றன. இந்த 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த புதிய மாடல்களில் அடாஸ் வசதி வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift)

கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், பெரிய பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படாது என கூறப்படுகிறது. கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் புதுவரவுகளான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய மாடல்களுக்கு போட்டி அதிகரிக்கலாம்.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross)

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய கேபின், புதிய வெளிப்புற டிசைன், புதிய இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்படலாம்.

பாதுகாப்பு பல மடங்கு அதிகமாகும்... அடாஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் நடப்பாண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய மாடல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2022, 19:06 [IST]
English summary
5 cars to get adas in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+