ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

ஆப்பிள் நிறுவனம் ஒருவழியாக அதன் புதிய ஐபோன் 14 வரிசை மொபைல் போன்களை அவற்றின் விலைகளுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 14 ப்ரோ & ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பெரியதாக மாற்றமில்லை என்றாலும், 14 ப்ரோ மேக்ஸின் புதிய 1 டிபி (TB) வெர்சன் சுமார் ரூ.1.9 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் செகண்ட்-ஹேண்டில் கிடைக்கக்கூடிய கார்களை இனி பார்க்கலாம்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

1. மாருதி சுஸுகி ஆல்டோ

பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்போர்க்கு எப்போதுமே முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக இருப்பது ஆல்டோ ஆகும். அத்தகைய காரை செகண்ட்-ஹேண்டில் வாங்குவது என்பது இன்னும் விலை குறைவானதாக இருக்கும். மாருதி சுஸுகி ஆல்டோ, இந்தியாவின் சிறந்த விற்பனை ஹேட்ச்பேக் கார் ஆகும்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

இதன் புதிய தலைமுறை மாடல் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.1.8 லட்சத்திற்குள் இந்த காரை வாங்க நினைப்பவர்கள் 2014-2016இல் தயாரிக்கப்பட்ட ஆல்டோ காரின் பக்கம் செல்லலாம். குறைந்த விலையிலான ஆல்டோ காரில் 800சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

2. ஹூண்டாய் சாண்ட்ரோ

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வலுவாக காலூன்ற ஆரம்ப காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்த கார்களுள் சாண்ட்ரோவும் ஒன்று. தற்சமயம் விற்பனையில் இல்லாவிட்டாலும், இப்போதும் உங்களால் சாண்ட்ரோ கார்களை எளிதாக சாலையில் காண முடியும்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

இந்தியாவில் சாண்ட்ரோ பிரபலமானதே அதன் 2ஆம் தலைமுறை எக்ஸ்-இங் தோற்றத்தில்தான். இந்த தோற்றத்தில் சாண்ட்ரோ காரை தற்சமயம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரையிலான விலைகளில் வாங்க முடியும். சாண்ட்ரோ எக்ஸ்-இங் காரில் 1.1 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

3. ரெனால்ட் க்விட்

இந்த வரிசையில் நாம் பார்க்க போகும் மற்றொரு அளவில் சிறிய கார் ரெனால்ட் க்விட் ஆகும். க்விட்டின் முந்தைய தலைமுறை மாடலை ரூ.1.9 லட்சத்திற்குள் வாங்க முடியும். ரெனால்ட்டின் ஹேட்ச்பேக் காரான க்விட்டை 800சிசி அல்லது 1.0 லிட்டர் என்ஜின் உடன் வாங்கலாம்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

இந்த என்ஜின்களுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ரெனால்ட் க்விட் நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற காராக விளங்குகிறது. அளவில் சிறிய கார் என்பதால், நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் க்விட்டை எளிமையாக பார்க் செய்ய இயலும்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

4. மாருதி சுஸுகி ஆல்டோ கே10

விற்பனையில் இருந்த சமயத்தில் ஆல்டோவும், ஆல்டோ கே10 மாடலும் வித்தியாசப்பட்டது அவற்றில் பொருத்தப்படும் என்ஜின்கள் மூலமாகவே. அதாவது ஆல்டோ காரில் 800சிசி என்ஜினும், ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் என்ஜினும் பொருத்தப்பட்டன. கே10 என்பது 1.0 லிட்டர் என்ஜினை குறிப்பதாகவே இருந்தது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

செகண்ட் ஹேண்ட்டில் வாங்கினாலும் ஆல்டோ கே10 கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற காரே ஆகும். இதனை ரூ.1.8 லட்சம் என்ற அளவிலான விலையில் தற்போதும் செகண்ட் ஹேண்டில் வாங்க முடியும்.

குறிப்பு: இதனையும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஆல்டோ கே10 காரையும் குழப்பி கொள்ள வேண்டாம்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

5. ஹூண்டாய் ஐ10

ஆக மொத்தத்தில் இந்த லிஸ்ட்டில் உள்ளவை அனைத்துமே ஹேட்ச்பேக் கார்களாகும். ஹூண்டாய் ஐ10 இந்தியாவில் முதல்முறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 2010இல் களமிறக்கப்பட்டது. அதற்காக மிகவும் பழையதாக இல்லாமல், 2012இல் இருந்து 2014க்குள் தயாரிக்கப்பட்ட ஐ10 காரை ரூ.1.8 லட்சத்தில் வாங்கலாம்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையில் இந்த 5 கார்களை வாங்கிவிடலாம்!! பதறாதீங்க... செகண்ட் ஹேண்டில்தான்!

அந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட ஐ10 காரில் 1.1 லிட்டர் டீசல் & 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன. இதில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் ஆனது தற்போதுவரையில் ஹூண்டாய் தயாரித்த மிகவும் சிறப்பான பெட்ரோல் என்ஜின்களுள் ஒன்று என சொல்லலாம்.

இந்த 5 ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றை உங்களால் செகண்ட் ஹேண்டில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1டிபி மொபைல்போனின் விலையில் வாங்க இயலும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 18:20 [IST]
English summary
5 pre owned cars you can buy for price of iphone 14 pro max 1 tb
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+