புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

பொதுவாக கார் பிராண்ட்கள் வருட இறுதி மாதங்களிலும், வருடத்தின் துவங்க மாதங்களிலும் தான் அதிக எண்ணிக்கைகளில் புதிய கார்களை அறிமுகம் செய்கின்றன.

அதன்படி, வரும் மாதங்களில் பல்வேறு பயணிகள் கார்கள் புதியதாக களமிறக்கப்பட உள்ளன. இந்த வகையில் அடுத்த 6 மாதங்களில் மாருதி சுஸுகி & டொயோட்டா பிராண்ட்களில் இருந்து சில புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றில் ஐந்தினை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

1. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா

அடுத்ததாக விரைவில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து புதிய கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து முதல் ஹைப்ரிட் காராக விளங்கவுள்ள இந்த எஸ்யூவியில் மொத்தம் இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

1.5 லிட்டர் கே15சி மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங்க்-ஹைப்ரிட் பெட்ரோல் என்பவை இந்த 2 என்ஜின் தேர்வுகளாகும். கம்பீரமான எஸ்யூவியாக இந்திய சாலைகளில் உலாவர உள்ள இந்த காரில் அதற்கு ஏற்ப உட்புற கேபினிலும் ஏகப்பட்ட நவீன தொழிற்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

2. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

மாருதி சுஸுகியின் கூட்டணி பிராண்டான டொயோட்டாவில் இருந்தும் கிராண்ட் விட்டாரா காரின் அடிப்படையிலான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வெளிவர உள்ளது. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாக கொண்டதால், அதில் வழங்கப்பட உள்ள 1.5 லிட்டர் கே15சி மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங்க்-ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தான் இந்த டொயோட்டா காரிலும் கொடுக்கப்பட உள்ளன.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

அதேபோல், கிராண்ட் விட்டாராவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அதே சுஸுகியின் க்ளோபல்-சி ப்ளாட்ஃபாரத்தில் தான் டொயோட்டா ஹைரைடரும் உருவாக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டாவின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் செப்டம்பரில் இருந்து இந்தியாவில் துவங்கப்பட உள்ளன.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

3. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்

இந்தியர்களின் ஃபேவரட் கார்களுள் ஒன்றான இன்னோவா புதிய தலைமுறை வெர்சனில் அறிமுகமாகவுள்ளதை இந்நேரத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை இன்னோவா கார் மறைப்புகளுடன் கடந்த மாதங்களில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

அதுமட்டுமின்றி, புதிய தலைமுறை மாடலை கொண்டுவருவதற்கு முன்பாக தற்போதைய தலைமுறை இன்னோவாவின் டீசல் வேரியண்ட்களின் விற்பனையை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் நிறுத்தி இருந்தது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய இன்னோவா மாடல் இன்னோவா ஹைக்ராஸ் அல்லது இன்னோவா ஜெனிக்ஸ் என்ற இரு பெயர்களில் ஏதேனும் ஒன்றில் வெளியாகலாம். இதில் இன்னோவா ஹைக்ராஸ் பெயருக்கு தான் அதிக வாய்ப்புள்ளது.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

4. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் முற்றிலும் புதிய லேண்ட் க்ரூஸர் 300 காருக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியது. புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலில் புதிய எல்சி300 காரை எதிர்பார்க்கிறோம்.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

அதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக நீண்ட லிஸ்ட்டில் கேபின் அம்சங்களை பெற்றுவரலாம். இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய லேண்ட் க்ரூஸர் 300 காரில் 3.3 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 305 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

5. மாருதி சுஸுகி ஒய்டிபி எஸ்யூவி

விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் பலேனோ ஹேட்ச்பேக்கின் அடிப்படையில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் வெளிவரவுள்ளதாக பல மாதங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் முதல்முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது.

புதுசா இத்தனை மாருதி & டொயோட்டா கார்களா!! 6 மாசத்தில் ஒண்ணு பின்னாடி ஒன்னா வந்துடும்!

மாருதி சுஸுகியின் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் சன்ரூஃப் உள்பட அம்சங்கள் நீண்ட வரிசையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து இந்த எஸ்யூவி காரை பற்றிய மற்ற விபரங்கள் தற்போதைக்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, August 27, 2022, 10:57 [IST]
English summary
5 upcoming maruti toyota cars that will be launch in next 6 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+