தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காரை இவ்ளோ தெளிவா இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா? இப்போ பாருங்க! கிளியரா தெரியுது!
நடிகர் தனுஷ் பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் முதல் முறையாக மிக மிக தெளிவாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பயன்படுத்தி வரும் நடிகர்களில் தனுஷும் ஒருவர் ஆவார். 2015ம் ஆண்டே அவர் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிவிட்டார். அவர் வாங்கியது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் சொகுசு கார் மாடலாகும். இந்த மாடலுக்கு இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது.

இத்தகைய ஓர் ஆடம்பர வாகனத்தையே தனுஷ் தனது சொகுசான பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றார். இந்த காரே தற்போது மிக மிக தெளிவாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. வெகு நீண்ட காலங்களாக இக்கார் தனுஷின் பயன்பாட்டில் இருந்து வருகின்ற போதிலும், இப்போதே முதல் முறையாக தெளிவாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது.

அஜய் ஷரன் என்பவரே தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வெளியிட்டவர் ஆவார். அவரது இன்ஸ்டா கணக்கின் வாயிலாகவே காரின் அனைத்து தெளிவான படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 மாடல் ஆகும். தனக்கேற்ப சில மாற்றங்களுடன் இக்காரை தனுஷ் வாங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. 6.6 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 பெட்ரோல் எஞ்ஜினே இந்த கோஸ்ட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க காரையே நடிகர் தனுஷ் வைத்திருக்கின்றார். இதைவிட பல மடங்கு அதிக சிறப்புகள் கொண்டதாக இதன் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் இருக்கின்றது. ஆமாங்க, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கோஸ்ட் காரின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனை ஏற்கனவே விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது.

இந்திய சந்தையிலும் அக்கார் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ரூ. 7 கோடிக்கும் அதிமான விலையில் இரண்டாம் தலைமுறை கோஸ்ட் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய ஜெனரேஷனைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சேர்ப்புடன் இரண்டாம் தலைமுறை கோஸ்ட் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

புதிய மாற்றங்களின் அடிப்படையில் காரின் அளவுகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அளவு மாற்றப்பட்டதால் காரின் ஸ்டோரேஜ் 507 லிட்டராக அதிகரித்திருக்கின்றது. ஆகையால், மிக அதிகளவில் தேவையான பொருட்களை இந்த காரில் வைத்த எடுத்துச் செல்ல முடியும். இதுமட்டுமின்றி, எஞ்ஜின் மற்றும் சஸ்பென்ஷன் விஷயத்திலும் இரண்டாம் தலைமுறை கோஸ்ட் மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது.

50:50 எடை பகிர்மானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக காரின் எஞ்ஜின் முன் ஆக்ஸிலுக்கு பின்னால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இதில் பயணிக்கும்போது சொகுசு கப்பலில் மிதப்பதைப் போன்ற ஓர் அனுபவம் நிச்சயம் கிடைக்கும். இதுபோன்ற மிக சொகுசான பயண அனுபவத்தை ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகள் வழங்கும் என்கிற காரணத்திற்காக செல்வந்தர்கள் இக்காரின் பக்கம் 'ஈ' போல் மொய்க்கின்றனர்.

ஏற்கனவே கூறியதைப் போல் இரண்டாம் தலைமுறை கோஸ்ட் காரில் புதிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.6 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 571 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. குறைந்த ஆர்பிஎம்மிலும் அதிக டார்க்கை வழங்கும் வகையில் இந்த எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை கோஸ்ட் காரின் ஒட்டுமொத்த எடை 2.5 டன்கள் ஆகும். இது வெறும் 4.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 205 கிமீட்டராக இருக்கின்றது. இந்த சூப்பரான காரை பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
Source: Ajay__sharan


Click it and Unblock the Notifications








