இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

நடிகர் கமலஹாசன் அவரது ஜிம் டிரெயினருக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

நடிகர் கமலஹாசன் தனது ஜிம் டிரெயினருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 16 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசன் இருவரும் இணைந்து இந்தியன் 2 படத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1996 இல் வெளியாகி வெற்றி நடைபோட்ட திரைப்படங்களில் இந்தியன் படமும் ஒன்று.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

இந்த படத்தின் இரண்டாம் பாகமாகவே இந்தியன் 2 வரவிருக்கின்றது. ஆகையால், கமல் - இயக்கனர் ஷங்கர் இருவரும் இந்த படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, இந்த படத்திற்காக தன்னை பலமடங்கு மெருகேற்ற தொடங்கியிருக்கின்றார் நடிகர் கமல். இதற்காக தீவிர உடற்பயிற்சியிலும் அவர் ஈடுபட தொடங்கியிருக்கின்றார்.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

இதற்கு உதவியாக இருந்துக் கொண்டிருக்கும் ஜிம் டிரெயினருக்கே நடிகர் கமல் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் காரே பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தையும் நடிகர் வெளியிடவில்லை. தற்போது, கார் பரிசளித்திருக்கும் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வு கமல் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

இதுபோன்று நடிகர் கமலஹாசன் விலையுயர்ந்த காரை பரிசளிப்பது முதல் முறையல்ல. அண்மையில் திரையில் வெளியாகிய வெற்ற நடைப்போட்ட விக்ரம் படத்திற்காகவும் நடிகர்கள் பரிசுகளை வாரி வழங்கினார். அந்தவகையில், நடிகர் சூர்யாவிற்கு அவர் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சையும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஆடம்பர ரக கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

லெக்சஸ் இஎஸ் 300எச் மாடல் காரையே அவர் பரிசாக வழங்கினார். இதன் விலை ரூ. 65.60 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த நிலையில், தற்போது வெளியிலேயே வராத ஓர் திரைப்படத்திற்கு பரிசளிப்பை செய்ய தொடங்கியிருக்கின்றார் நடிகர் கமலஹாசன். இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற ஆரம்பித்திருக்கின்றது.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

சென்னை - திருப்பதி ஆகிய பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிசியான ஷெட்யூலில் இயங்கி வரும் வேலையிலேயே தனது ஜிம் டிரெயினருக்கு காரை பரிசளித்து அவரை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி நாட்டின் பிற மொழி பேசும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு நிலவியது.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

இதுமாதிரியான வெற்றியே இந்தியன் 2 படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த படத்தின் வருகையை எதிர்நோக்கி கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது பரிசளிக்கப்பட்டிருக்கும் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

இருப்பினும், படத்தில் இடம் பெற்றிருப்பது ரெனால்ட் கைகர் என்பதை எங்களால் யூகிக்க முடிகின்றது. தற்போது இந்திய சந்தையில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய நிலவரப்படி கைகர் ரூ. 5.84 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் இக்கார் கிடைக்கும். இதில், 1.0 லிட்டர் மோட்டாருடன் எம்டி மற்றும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும், இரண்டாவது மோட்டாரில் எம்டி மற்றும் எக்ஸ்-ட்ரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படும். இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 20.5 கிமீ வரை மைலேஜ் தரும்.

இப்போவே சம்பவம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு உலக நாயகன்... ஜிம் டிரெயினருக்கு பரிசளித்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா!..

ரெனால்ட் கைகர் ஓர் நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் என்பது கூடுதல் முக்கிய தகவல் ஆகும். எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாலும், அதீத பாதுகாப்பை வழங்கும் வகையில் மோதல் ஆய்வில் இக்கார் செயல்பட்ட காரணத்தினாலும் இந்த ரேட்டிங்கை அது பெற்றது. இத்தகைய காரையே நடிகர் கமல் அவரது ஜிம் டிரெயினருக்கு பரிசாக வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor kamal gifted renault car to his fitness trainer
Story first published: Thursday, September 29, 2022, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X