இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

உல்லாச கப்பல் போன்ற ஓர் காரில் பிரபல நடிகர் வலம் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அப்படி என்ன காரை?, எந்த நடிகர் பயன்படுத்தினார் என்பது போன்ற சுவாரஷ்யமான விபரங்களையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

கார் பிரியர்கள் பலரின் கனவு வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பாதோர் ஒருவர்கூட இந்த உலகில் இருக்க முடியாது. ஏனெனில், அந்தளவிற்கு சிறப்பு வசதிகளை வாரி வழங்கும் வாகனங்களாகவே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் காட்சியளிக்கின்றன. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவே.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

காரணம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் மிக மிக அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. ஏன், செல்வந்தர்கள் சிலருக்கே இதனை வாங்குவது சவாலான ஒன்றாக காட்சியளிக்கின்றது. அந்தளவிற்கு மிக உயரிய விலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

இத்தகைய மிக மிக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர வாகனத்திலேயே பிரபல நடிகர் ஒருவர் வலம் வந்திருக்கின்றார். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த சஞ்ஜய் தத் இவரே ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வந்த நடிகர் ஆவார். இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு கார்கள் இருக்கின்றன.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

அவை அனைத்திலும் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட காராக தற்போது அவர் பயன்படுத்தி ரோல்ஸ் ராய்ஸ் கார் காட்சியளிக்கின்றது. கோஸ்ட் (Ghost) எனும் மாடலையே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த காரின் மதிப்பு ரூ. 6.95 கோடி ஆகும். எந்தவொரு வரியும் சேர்க்கப்படாமல் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கும் விலை இதுவாகும்.

இத்தகைய மிக உயர்ந்த காரிலேயே பாலிவுட் நடிகர் சஞ்ஜய் வலம் வந்திருக்கின்றார். இவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காரின் விலை மேலே பார்த்ததைக் காட்டிலும் இன்னும் அதிக விலைக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான விலை விபரம் வெளியாகவில்லை.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

இக்காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவர் மற்றும் 780 என்எம் டார்க்கை வெளியேற்றும். தற்போது விற்பனையில் இருக்கும் புதிய வெர்ஷன் இதைவிட அதிக திறனை வெளியேற்றும் வசதியைக் கொண்டிருக்கின்றது.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

சஞ்ஜய் தத்-இடம் இன்னும் பன்முக சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் ஃபெர்ராரி 599 ஜிடிபி (Ferrari 599 GTB) சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை வைத்து பார்க்கையில் சஞ்ஜய் தத் மிக சிறந்த கார் பிரியர் என்பதை உணர முடிகின்றது.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

அதேநேரத்தில், இந்த பிரபலத்திடம் விலையுயர்ந்த பைக்குகள் சிலவும் இருக்கின்றன. அந்தவகையில், டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 1200 மற்றும் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் உள்ளிட்ட பைக்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவையே சஞ்ஜய் தத் ஓர் மிகப் பெரிய வாகன காதலர் என்பதற்கு சான்றாக உள்ளன.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

இந்தியாவில் இன்னும் சில நடிகர்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்துகின்றனர். பிரியங்கா சோப்ரா, ஹிரித்திக் ரோஷன், அக்ஷய் குமார், ஷாருக் கான் போன்ற பாலிவுட் நடிகர்களே விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்துகின்றனர். இதேபோல் நடிகர் விஜய் போன்ற முக்கியமான தமிழ் திரை நட்சத்திரங்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது காரா!.. இல்ல சொகுசு கப்பலா!.. சாலையில் மிதக்கும் உல்லாச வாகனத்தில் வந்த பிரபல நடிகர்!

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிப்பது உல்லாச கப்பலில் மிதக்கும் அனுபவத்தை வழங்கும். இதனால்தான் தொழிலதிபர்கள் தொடங்கி திரை நட்சத்திரங்கள் வரை பலர் தங்களின் சொகுசான பயணங்களுக்கு அக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற கரடு-முரடான சாலைகள் கொண்ட நாடுகளுக்கு ஏற்ற அதிக லக்சூரியான காராக இது இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Saturday, February 19, 2022, 19:38 [IST]
English summary
Actor sanjay dutt spotted with rolls royce ghost luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+