ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

சென்னை காவல்துறை இயக்கி வரும் காவல் கரங்கள் அமைப்பிற்கு நடிகர் சூர்யா விலை உயர்ந்த காரை அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் எதற்காக வழங்கப்பட்டது, அதன் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் கீழே உள்ள பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் சென்னை காவல்துறையால் தொடங்கப்பட்டது காவல் கரங்கள். இந்த அமைப்பின் ஓராண்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவிலேயே நடிகர் சூர்யா வழங்கிய கார், அக்கார் எந்த காரணத்திற்காக வழங்கப்பட்டதோ அந்த பணியை மேற்கொள்வதற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

நிகழ்வில் சூர்யாவிற்கு பதிலாக அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவரே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னை காவல்துறையால் நடத்தப்பட்டு வரும் காவல் கரங்கள் அமைப்பில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக நலத்துறை ஆகியவற்றைச் சார்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

இவர்களின் உதவியுடனேயே சென்னை காவல்துறை ஏழைகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. இத்தகைய ஓர் அமைப்பிற்கே தன்னுடைய உதவி கரத்தை நீட்டியுள்ளார் நடிகர் சூர்யா. தற்போது வழங்கப்பட்டிருக்கும் காரின் மதிப்பு ரூ. 6 லட்சம் என கூறப்படுகின்றது. கார் அன்பளிப்பு குறித்து வெளியாகி இருக்கும் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த வாகனம் மாருதி சுஸுகி ஈகோவாக இருக்கலாம் என தெரியப்படுத்துகின்றது.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

இந்த வாகனம் இந்தியாவில் பயணிகள் வாகனமாகவும், ஆம்புலன்ஸாகவும், லோடு வேனாகவும் (டெலிவரி வாகனமாகவும்) பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நடிகர் சூர்யா காவல் கரங்களின் பயன்பாட்டிற்காக ஈகோ காரை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றார்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

அந்த வாகனம் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்ல உதவும். இதற்கான பாத்திரங்களையும் வாகனத்துடன் சேர்த்து நடிகர் சூர்யா வழங்கியிருக்கின்றார். ஊரை விட்டு வெளியேறிய அல்லது ஓடி வந்த பலர் சென்னையின் சாலையோரங்களை தற்காலிக (சிலர் நிரந்த) குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றார்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

இவர்களில் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே கேள்விக் குறியாக இருக்கின்றது. குறிப்பாக, வயது முதிர்ந்தோர் உண்ண உணவின்றி தவிப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இத்தகையோருக்கே காவல் கரங்கள் தங்களின் உதவிகளை வழங்கி வருகின்றது. இவர்களுக்கு உதவும் வகையில் சூர்யா சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

நடிகர் சூர்யா அகரம் அமைப்பின் வாயிலாக பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றார். ஏழை குழைந்தைகளின் படிப்பிற்கு உதவுவது மற்றும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவுதல் போன்ற மிக உண்ணத பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கான நற்பணியிலும் அவர் களமிறங்கியிருக்கின்றார்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

இந்த வாகனத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காவல் கரங்கள் முதலாமாண்டு நிறைவு விழாவில் மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி உள்ளிட்ட காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவ அதிக விலை கொண்ட காரை வழங்கிய நடிகர் சூர்யா... இவர் சாதா ஹீரோ இல்லைங்க சூப்பர் ஹீரோ!

இத்துடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலரும் அதில் பங்கு பெற்றனர். நிகழ்வின்போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுவரை 2 ஆயிரம் ஆதரவற்றோர்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் இத்தனை ஆதரவற்றவர்கள் இருக்கின்றார்களா என பலரை இந்த தகவல் கேள்வி எழுப்ப செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2022, 16:35 [IST]
English summary
Actor surya gifts maruti eeco to kaaval karngal
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+