மிலிட்டரி பச்சை நிற சொகுசு காரில் கெத்தா வந்திறங்கிய பிரபல நடிகை! காரோட விலைய பத்தி மட்டும் கேக்காதீங்க!
மிலிட்டரி பச்சை நிற சொகுசு காரில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் கெத்தாக வந்திறங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடிகர்கள், நடிகைகள் மத்தியில் லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. திரை நட்சத்திரங்களிடம் மட்டுமில்லைங்க அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியிலும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஆடம்பர கார்களுக்கு செம்மையான டிமாண்ட் நிலவி வருகின்றது.

ஏன், நம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினும்கூட லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்பையே பயன்படுத்தி வருகின்றார். அவர் வெள்ளை நிறத்திலான டிஃபென்டர் (Defender) காரை சமீப காலமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றார். இதுபோன்று இன்னும் பல பிரபலங்கள் தங்களின் சொகுசான பயணங்களுக்காக லேண்ட் ரோவர் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தானும் ஓர் லேண்ட் ரோவர் வாகன பிரியர் என்பதை வெளிக்காட்டியிருக்கின்றார் பிரபல நடிகை அனன்யா பாண்டே. வளர்ந்து வரும் நடிகையான இவர், மிலிட்டரி கிரீன் (Military Green) எனும் கவர்ச்சிகரமான நிறம் கொண்ட லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரை பயன்படுத்தி வருகின்றார்.

இதன் வாயிலாகவே தான் ஒரு லேண்ட் ரோவர் கார் காதலர் என்பதை வெளிக்காட்டியிருக்கின்றார். மிலிட்டரி கிரீன் ஓர் பிரத்யேக நிறமாகும். பொதுவாக, காரின் அடிப்பகுதியில் உள்ள கிளாடிங் போன்ற உடற் பேனல்கள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஆனால், அனன்யா பாண்டே பயன்படுத்திய ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரில் அனைத்து பாடி பேனல்களும் மிலிட்டரி பச்சை நிறமே காட்சியளிக்கின்றது.

இது நடிகைக்கு மிலிட்டரி பச்சை நிறம் அதிகம் பிடித்திருப்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இந்த நிறத்தை பிரத்யேகமாக கார் அலங்காரம் செய்பவர்கள் வாயிலாக அனன்யா செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. காரை கூடுதல் கவர்ச்சியானதாக மாற்றும் பொருட்டு அவர் இவ்வாறு செய்திருக்கின்றார்.

அதேவேலையில், ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரின் பூட் லிட், ரூஃபில் உள்ள ஸ்பாய்லர், பெயர் பேட்ச் மற்றும் டி-பில்லர்கள் ஆகியவற்றில் மினு மினுக்கும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், முன் பக்கத்தில் என்ன நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தகவல் வெளியாகவில்லை.

ஏனெனில், காரின் பின் பக்க காட்சிகள் மட்டுமே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றது. ஆகையால், முன் பக்கத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை அனன்யா செய்திருக்கின்றார் என்பது தெரியவில்லை. கருப்பு நிற அலங்காரமே அங்கு இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காரை அனன்யா பாண்டே வெகுநாட்களாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாரிவாஹனில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இச்சொகுசு காரை அனன்யா பாண்டேவின் தாயார் பாவனா பாண்டேவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
2020ம் ஆண்டு ஜூன் மாதம் இக்கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயின் பெயரில் இக்கார் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இந்த காரை அனன்யா பாண்டாவே பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பிடித்தமான கார்களில் ஒன்றாக ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாறியிருப்பதே இதற்கு காரணம்.

எனவேதான் பிரத்யேகமாக சில அலங்காரப் பணிகளை அவர் செய்திருக்கின்றார். இந்த இடத்தில் 'இந்தியாவில் விராப்பிங் செயல் சட்டப்பூர்வமானதா?' என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கும். வாகனத்தின் நிறத்தை மாற்றுவது சட்டப்படி குற்றமாகும்.

இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போலீஸார் பாடி விராப்பிங் எனப்படும் புதிய நிற ஸ்டிக்கரை ஒட்டுவதற்காக வாகனங்களை தடுத்து நிறுத்துவதில்லை. அதேநேரத்தில் உங்கள் வாகனத்தை நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் உள்ளூர் ஆர்டிஓ-விடம் எழுத்துப்பூர்வமாக இதற்கான அனுமதியைப் பெற முயற்சிக்கலாம். இதன் வாயிலாக மட்டுமே விராப்பிங் செயலுக்கு சட்டப்பூர்வமாக்க முடியும்.

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜினில் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழக்கமான அம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 300 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டே ரூ. 1.03 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








