ஆட்டோ ரிக்ஸா வாங்கிய பிரபல நடிகை! காரணத்தை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்! ரொம்ப வித்தியாசமா இருக்காங்களே!
இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகைகளில் ஒருவர் குல் பனாக் (Gul Panag). இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். நடிகை என்பதை தவிர, மாடல், தொழிலதிபர் என இவருக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. மற்ற நடிகைகளுடன் ஒப்பிடும்போது, முற்றிலும் வித்தியாசமான மற்றொரு முகமும் இவருக்கு உண்டு.
ஆம், குல் பனாக் மிகவும் தீவிரமான வாகன ஆர்வலர். வாகனங்கள் மீது குல் பனாக்கிற்கு அளவு கடந்த காதல் உண்டு. அந்த வாகனங்களில் சாலை மார்க்கமாக பயணம் செய்வதிலும் குல் பனாக்கிற்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக சாகச பயணங்களை மேற்கொள்வது என்றால், குல் பனாக் அதிக ஆர்வம் காட்டுவார். இந்த சூழலில், புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா ஒன்றை (Electric Auto Rickshaw) குல் பனாக் தற்போது வாங்கியுள்ளார்.

குல் பனாக் தற்போது வாங்கியிருப்பது மஹிந்திரா ஜோர் க்ராண்ட் (Mahindra Zor Grand) ஆட்டோ ரிக்ஸா ஆகும். இது பேட்டரி மூலமாக இயங்க கூடிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் ஆகும். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. கார் போன்ற பயணிகள் வாகன செக்மெண்ட்டில் மட்டுமல்லாது, ஆட்டோ ரிக்ஸா போன்ற வர்த்தக வாகன செக்மெண்ட்டிலும் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டுள்ளன.
வர்த்தக வாகன செக்மெண்ட்டில், எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஈடுபட்டு கொண்டுள்ளன. இதில், மஹிந்திரா நிறுவனம் ஒன்றாகும். புதிய ஜோர் க்ராண்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது சரக்குகளை கொண்டு செல்ல பயன்படும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா ஆகும். தற்போதைய நிலையில் 3.50 லட்ச ரூபாய் முதல் 3.80 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் மஹிந்திரா ஜோர் க்ராண்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மஹிந்திரா ஜோர் க்ராண்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவில், 10.24 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 kW எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா என்றாலும் கூட, செங்குத்தான சாலைகளிலும் சுலபமாக ஏறி விடும். ஏனெனில் இதன் டார்க் அவுட்புட் 50 என்எம் ஆகும். இதன் காரணமாக செங்குத்தான சாலைகளிலும் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லாமல் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவால் ஏற முடிகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 153 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிப்பதை காட்டிலும், குறைவான ரேஞ்ச்தான் கிடைக்கும்.எனவே நடைமுறை பயன்பாட்டில் எப்படி பார்த்தாலும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் பேட்டரியை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர்களாக உள்ளது. டெலிவரி வேன் பாடி மற்றும் பிக்-அப் ஸ்டைல் பாடி ஆகிய ஆப்ஷன்களில், மஹிந்திரா ஜோர் க்ராண்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா கிடைக்கிறது. இதில், பிக்-அப் ஸ்டைல் பாடி மாடலை குல் பனாக் தேர்வு செய்துள்ளார். தற்போது சந்தையில் கிடைக்கும் டீசல் மற்றும் சிஎன்ஜி எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு, மஹிந்திரா ஜோர் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா மிகச்சிறந்த மாற்றாக இருக்கும். ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா ஜோர் க்ராண்ட் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளும், இயக்குவதற்கு ஆகும் செலவுகளும் மிகவும் குறைவு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், குல் பனாக் மிகவும் தீவிரமான வாகன ஆர்வலர் ஆவார். வித்தியாசமான பைக்குகள் மற்றும் கார்களை சேகரிப்பதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே தனது தனித்துவமான வாகன கலெக்ஸனை விரிவாக்கும் நோக்கத்தில், அவர் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா ஜோர் க்ராண்ட், அவரது முதல் எலெக்ட்ரிக் வாகனம் இல்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
முன்னதாக மஹிந்திரா இ2ஓ (Mahindra E2o) எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். இதுதவிர புதிய தலைமுறை மஹிந்திரா தார் (Mahindra Thar), மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4) போன்ற கார்களையும், பிஎம்டபிள்யூ எஃப்650 ஃபன்ட்யூரோ (BMW F650 Funduro), டிரையம்ப் போனிவில்லே டி120 (Triumph Bonneville T120), ஜாவா 42 (Jawa 42) ஆகிய பைக்குகளையும் குல் பனாக் சொந்தமாக வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








