பார்த்த உடனே ரொம்ப பிடிச்சுபோச்சாம்... கார் வெளியீட்டு நிகழ்வின்போது பகிரங்கமாக ஒப்பு கொண்ட கரீனா கபூர்!
பிரபல இந்தி திரைப்பட நடிகை கரீனா கபூர் அண்மையில் புதிய கார் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த சுவாரஷ்யமான பேட்டி குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் அண்மையில் அதன் புத்தம் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் (Mercedes AMG EQS 53 4Matic+) எனும் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் செடான் ரக மின்சார காராகும். இந்த காரின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகை கரீனா கபூர் கான் கலந்துக் கொண்டார்.

இவர் ஓர் மிகப் பெரிய பென்ஸ் கார் பிரியர் ஆவார். இதற்கு சான்றாக கரீனா இடத்தில் பன்முக மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் புதுமுக காரின் அறிமுக நிகழ்வில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், "புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரை சொந்தமாக்கிக் கொள்ள தான் விரும்புவதாக" வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின்போதே இத்தகைய பதிலை அவர் தெரிவித்தார். இதோ அவர் கூறிய முழுமையான பதில், "என்னுடைய வாழ்நாளில் பெரும்பாலும் மெர்சிடிஸ் பென்ஸ் காரையே அதிகம் பயன்படுத்தி இக்கின்றேன். புதிய மெர்சிடிஸ் இக்யூஎஸ் என்னை பெரிதாகக் கவர்ந்திருக்கின்றது" என்றார். மேலும், "அதை விரைவில் சொந்தமாக்க விரும்புவதாகவும்" தெரிவித்தார்.

ஆகையால், விரைவில் கரீனாவின் கராஜில் புதிய மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் சொகுசு கார் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக கூறியதைப் போலவே ஏற்கனவே நடிகை இடத்தில் பன்முக மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. முந்தைய தலைமுறை எஸ்-கிளாஸ் மற்றும் இ-கிளாஸ் உள்ளிட்டவை அவரிடத்தில் உள்ளன.

இவற்றின் பட்டியலிலேயே விரைவில் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் காரை இணைக்க கரினா விருப்பம் தெரிவித்திருக்கின்றார். இது ஓர் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். உலக நாடுகளில் இந்த மாடல் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே ரூ. 2.45 கோடி என்ற உச்சபட்ச விலையில் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ஆகும்.

இந்த காரில் 107.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 586 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது மிக சூப்பரான ரேஞ்ஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை டைனமிக் பிளஸ் பேக்கேஜுடன் மெர்சிடிஸ் விற்பனைக்கு வழங்குகின்றது. இது பல்வேறு பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளை வாரி வழங்கும் பேக்கேஜாக இருக்கின்றது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் 765 பிஎஸ் மற்றும் 1020 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதுவே இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு ஆகும். மேலும், வெறும் 3.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இக்கார் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

இத்தகைய சூப்பரான மற்றும் விலையுயர்ந்த சொகுசு எலெக்ட்ரிக் காரையே கரீனா வாங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே இந்த நடிகையிடத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport), ஆடி க்யூ7 (Audi Q70, லெக்சஸ் எல்எக்ஸ் 470 (Lexus LX 470) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) உள்ளிட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுதவிர, இவருடைய கணவரான சைஃப் அலி கானிடத்திலும் எண்ணற்ற கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரிடத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes-Benz S-Class), ஆடி ஆர்எக் ஸ்பைடர் (Audi R8 Spider), லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover), ஃபோர்டு மஸ்டாங் ஜிடி 500 (Ford Mustang GT500), ஆடி ஏ3 கேப்ரியோலட் (Audi A3 Cabriolet), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) மற்றும் ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி (Jeep Grand Cherokee SRT) உள்ளிட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன.


Click it and Unblock the Notifications








