இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய கீர்த்தி சுரேஷ்! என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?..

கீர்த்தி சுரேஷ் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொகுசு வாகனத்தின் விலை, லக்சூரி வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

கன்னடாவை தவிர தென்னிந்தியாவின் பிற அனைத்து மொழி திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றார் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தன்னுடைய இல்லத்திற்கு விலையுயர்ந்த சொகுசு காரை அழைத்து வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது புதிய சொகுசு கார் குறித்த படங்களைப் பகிர்ந்துள்ளார். காருக்கு பூஜை போடுகின்ற மாதிரியான படங்களையே சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். விஜயதசமி பண்டிகையை முன்னிட்டே இந்த காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

நடிகையின் இந்த பகிர்வே தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 சீரிஸ் சொகுசு காராகும். இதனை மிகவும் அட்வான்ஸ்ட் சிறப்பு வசதிகள் கொண்ட காராக பிஎம்டபிள்யூ தயாரித்திருக்கின்றது. ஆகையால், இந்த காரின் விலையும் சற்று அதிகமானதாக இருக்கின்றது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சீரிஸ் சொகுசு கார் ரூ. 1.18 கோடி தொடங்கி ரூ. 1.78 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரின் உயர்நிலை தேர்வையே நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதன் உயர்நிலை தேர்விலேயே சொகுசு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப கருவிகள் மிக அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

எனவேதான், தொழிலதிபர்கள் தொடங்கி திரைநட்சத்திரங்கள் வரை பலரின் தேர்வாக எக்ஸ்7 சீரிஸின் உயர்நிலை வேரியண்ட் இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நடிகை கீர்த்தி சுரேஷும் உயர் தேர்வை வாங்கியிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. கீர்த்தி சுரேஷ் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு கார் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட பெரிய அளவு சொகுசு எஸ்யூவி காராகும்.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

எனவேதான் பெரிய குடும்பத்தினர் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அதிக சொகுசு வசதியையும், அதிக இட வசதியையும் விரும்புவோர் மத்தியில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7-க்கு கணிசமான சிறந்த டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பிற்கு காரில் வழங்கப்பட்டிருக்கும் சொகுசு வசதிகள் மட்டுமே காரணம் அல்ல. அதன் கவர்ச்சியான தோற்றமும் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

இந்த காரில் லேசர் ரக ஹெட்லேம்ப், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், தானாகவே பார்க்கிங் செய்யும் வசதி மற்றும் மூன்று வரிசையிலும் சாய்ந்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவையே இந்திய சொகுசு கார் விரும்பிகளைக் கவர காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இக்காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஐ-டிரைவ் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல், கிரிஸ்டல் எஃபெக்ட் கியர் லிவர் மற்றும் குரல் கட்டளை உதவி உள்ளிட்ட வசதிகளையும் எக்ஸ்7 பெற்றிருக்கின்றது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

எஞ்ஜினை பொருத்தவரை எக்ஸ்7 காரில் இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்விலும், 3.0 லிட்டர் இன்-லைன் ஆறு சிலிண்டர் இரட்டை-டர்போ டீசல் மோட்டார் தேர்விலும் வழங்கப்படுகின்றது. இதில், முதலாவதாக பார்த்த மோட்டார் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

அடுத்ததாக பார்த்த மோட்டார் 260 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த இரு மோட்டார்களிலும் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இது காரின் மிக சிறந்த செயல் திறனுக்கு உறுதுணையாக இருக்கின்றது. இத்தகைய மிக சூப்பரான வசதிக் கொண்ட காரையே நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிதாக வாங்கியிருக்கின்றார்.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய நடிகை கீர்த்தி சுரஷ்... என்ன காரணத்திற்காக வாங்கினாங்க தெரியுமா?

இவரிடத்தில் மினி கூபர் போன்ற சொகுசு கார்களும் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நட்சத்திரம் என்டிஆர்-க்கு ஜோடியாக புதுமுக படத்தில் நடித்து வருகின்றார். கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் 'பான் இந்தியா' திட்டத்தில் வெளியாக இருக்கின்றது. தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளே தொடங்கியிருக்கின்றது. விரைவில் பட பிடிப்பு பணிகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி நடிகை அனைவரையும் அசத்தியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, October 7, 2022, 10:41 [IST]
English summary
Actress keerthy suresh buys bmw x7 luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+