வேற லெவல் காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை வேறொரு நபருக்கு விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவரே தான் பயன்படுத்தி வந்த மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வேறொரு நபருக்கு விற்பனைச் செய்திருக்கின்றார். தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபருக்கே பிரியங்கா சோப்ரா, அவரது காரை விற்றிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

ஆனால், அந்த தொழிலதிபரின் பெயர் மற்றும் என்ன விலையில் கார் விற்கப்பட்டது என்பது போன்ற முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை தயாரிப்பாக கோஸ்ட் கார் மாடல் இருக்கின்றது. ரூ. 5 கோடிகள் இதன் விலையாகும். இதைவிட சற்று குறைவான விலையிலேயே இக்கார் விற்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

பிரியங்கா சோப்ரா சில்வர் மற்றும் கருப்பு நிறத்திலான கோஸ்ட் காரையே பயன்படுத்தி வந்தார். இந்த காரே தற்போது வேறொரு நபருக்கு விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது. நிக் ஜோனஸ் உடனான திருமணத்திற்கு பின்னர் பிரியங்கா சோப்ரா தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவில் கழித்து வருகின்றார். ஆகையால், இவரிடத்தில் உள்ள பல கார்கள் பயன்பாடின்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த காரணத்தினால்கூட இக்காரை அவர் விற்பனைச் செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை. கடந்த காலங்களில் பிரியங்கா சோப்ராவும் அவரது தாய் மது சோப்ராவும் பல முறை இந்த காரில் காட்சியளித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ட்வின்-டர்போசார்ஜட் மோட்டாராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனிலேயே இந்த மோட்டார் இயங்கும்.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

இந்த சொகுசு காரில் சூசைட் ரக டூர்கள், கதவில் ரோல்ஸ் ராய்ஸின் பிரத்யேக குடை, லெதர் இருக்கைகள், மினி குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பன்முக சொகுசு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி பயணிக்கும்போது காரில் செல்லுகின்ற அனுபவத்திற்கு பதிலாக நீரில் மிதப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும். இத்தகைய ஓர் சிறப்பான காரையே பிரியங்கா சோப்ரா தற்போது விற்றிருக்கின்றார்.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

பிரியங்கா சோப்ராவிடம் இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. மெர்சிடிஸ் மேபேக் எஸ்650, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி க்யூ 7, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் இ கிளாஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் அவரிடத்தில் உள்ளன. பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் இருப்பதால், இவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து துள்ளியமான விபரம் வெளியாகவில்லை.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

மேலே பார்த்த கார்களில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 சொகுசு காரை பிரியங்காவின் கணவரான நிக் ஜோனஸால் பரிசாக வழங்கப்பட்டது ஆகும். தனது புதிய ஆல்பம் மிக பெரிய வெற்றி கண்டதை அடுத்து இந்த கார் பிரியங்காவிற்கு பரிசாக வழங்கப்பட்டது. நீளமான வீல் பேஸ் கொண்ட கார் மாடலாக மேபேக் எஸ்650 காட்சியளிக்கின்றது.

வேற லெவல் சொகுசு காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா... இதுதான் காரணமா! இத விக்குறதுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ!

ஆகையால், இதில் இட வசதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்கது. லெக்ரூம் மிக மிக தாரளமாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரில் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ட்வின்-டர்போசார்ஜட் மோட்டாராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 630 பிஎச்பி மறஅறும் 1,000 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

Source: pinkvilla

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 10:43 [IST]
English summary
Actress priyanka chopra sells her rolls royce ghost here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+