விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

நடிகை ரம்பாவின் கார் விபத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

பிரபல நடிகை ரம்பா விபத்தில் சிக்கியிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 80-ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகையே ரம்பா. இவரை அறியாத தமிழ் திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது என கூறலாம். இவர் தற்போது இந்திய சினிமா உலகை விட்டு விலகி இருந்தாலும், அவ்வப்போது சின்ன திரையில் தோன்றி தனது திரையுலக வாழ்க்கையைத் தொடர்ந்து வருகின்றார்.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய தொழிலதிபர் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் ரம்பா கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். அந்த நாட்டிலேயே அவர் கார் விபத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை நடிகை ரம்பாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இன்ஸ்டா பதிவின் வாயிலாக இத்-தகவலை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

மகனையும், மகளையும் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும் வழியேலேயே எதிர்பாராத ரம்பா விபத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவரும், அவரது மகனும் சிறு சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார். ஆனால், அவருடைய மகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ரம்பா கூறியிருக்கின்றார்.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

ரம்பா பயன்படுத்தி வரும் கார்களில் டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X)-ம் ஒன்று. இந்த காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே அவர் விபத்தில் சிக்கியிருக்கின்றார். இந்த காரை நாம் தனியாக குறிப்பிட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது ஓர் அதீத பாதுகாப்பு திறன்கள் கொண்ட வாகனம் ஆகும். அதிக பாதுகாப்பிற்கு மட்டுமல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கும் பெயர்போன ஒன்றாக இந்த கார் இருக்கின்றது.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

குறிப்பாக டிரைவரே இல்லாமல் சாலையில் இயங்குதல், பார்க்கிங் செய்தல், பிரேக் பிடித்தல் போன்ற பலவற்றை இந்த எலெக்ட்ரிக் கார் செய்யும். இதுமாதிரியான வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

இதன் விளைவாக உலகின் நம்பர்.1 பணக்காரராக நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான எலன் மஸ்க் இருக்கின்றார். இத்தகைய ஓர் வாகனமே விபத்தில் சிக்கி சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. டெஸ்லா மாடல் எக்ஸ் ஓர் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

பாதுகாப்பில் மிக சிறந்த வாகனம் டெஸ்லா மாடல் எக்ஸ் என்பதே இந்த ரேட்டிங்கிற்கான அர்த்தம் ஆகும். இத்தகைய சூப்பர் ரேட்டிங்கை அது பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மோதல் ஆய்வின்போது மிக சிறப்பாக செயல்பட்டது, பாதுகாப்பு அம்சங்கள் மிக சிறப்பாக இயங்கியது, குறைவான பாதிப்புகளை மட்டுமே பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மாடல் எக்ஸ் ஐந்து ஸ்டார்களைக் குவித்தது.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

இருப்பினும், ரம்பா விஷயத்தில் சற்றே இந்த கார் பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது. இதன் விளைவாகவே ரம்பாவும், அவரது மகனும் வீட்டுக்கு திரும்பிய நிலையில் அவரது மகள் ஷாஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐந்து ஸ்டார்களை வாங்கியிருந்தும் அந்த கார் பெருசா பலனளிக்கல...

டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 535 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஃபரன்ட் இம்பேக்ட் புரடெக்சன், சொடு இம்பேக்ட் புரடெக்சன் மற்றும் லோவ் ரோலோவைர் ரிஸ்க் ஆகியவற்றின்கீழ் இக்காரை டெஸ்லா வடிவமைத்திருக்கின்றது. இத்துடன், செல்ஃப் டிரைவிங், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, அட்வான்ஸ்ட் திறன்கள் கொண்ட ஏர் பேக் போன்ற பன்முக பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Article Published On: Wednesday, November 2, 2022, 17:21 [IST]
English summary
Actress rambha tesla model x car met crash
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+