ஆளே மாறிட்டாங்க.. சமந்தா கிட்ட இப்படி ஒரு கார் இருக்கா? இதுல பயணிச்சா சொகுசு கப்பல்ல மிதக்குற மாதிரி இருக்கும்
சமந்தா சூப்பரான ஓர் காரில் வந்திறங்கும் வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் பயன்படுத்திய வாகனம் எது?, அதன் சிறப்பு வசதிகள் என்ன?, மற்றும் விலை எவ்வளவு என்பது?, பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இல்லற (திருமண) வாழ்க்கையை துறந்து, தற்போது சுதந்திர பறவையாக மாறியிருக்கின்றார் நடிகை சமந்தா. சுதந்திர பறவையாக மாற தொடங்கியதை அடுத்து அவரின் ஆட்டம் வேற லெவலில் மாறியிருக்கின்றது. திரைப்படங்களில் கவர்ச்சியான ஆடையில் நடிப்பது தொடங்கி ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது என சமந்தா திரையுலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில், அண்மையில் அவர் நடித்த 'ஹ்ம் சொல்றீயா மாமா' பாடல் வெறித்தனமான ஹிட்டை அடித்தது. இந்த பாடலின் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பன்மடங்கு பெருகி காணப்படுகின்றது. முன்னதாக தென்னிந்தியளவில் மட்டுமே இவருக்கு இருந்த ரசிக பட்டாளம் தற்போது நாடு முழுவதிலும் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது.

இந்த ரசிகர்கள் மத்தியிலேயே தற்போது சமந்தா சம்பந்தப்பட்ட ஓர் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல, நடிகை சமந்தா விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்திறங்கும் வீடியோவே ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஆடம்பரத்தின் சின்னமாக பார்க்கப்படுகின்றன.

எனவேதான் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரிடத்தில் இந்த கார் இருந்துவிடுகின்றது. இந்த நிலையிலேயே சமந்தா ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்திறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றார். இந்த காருடன் சமந்தா காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால், இந்த கார் அவருடையதுதானா என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழும்பியிருக்கின்றது. காரின் பக்கவாட்டு பகுதி மட்டுமே வீடியோவில் தென்பட்டிருப்பதால் அந்த வாகனம் யாருக்கு உரிமையானது என்ற விபரத்தை எங்களால் துள்ளியமாக வழங்க முடியவில்லை. அதேநேரத்தில், சமந்தாவிடம் போர்ஷே கேமேன் ஜிடிஎஸ் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் உள்ளிட்ட மிக உயரிய ரக கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்இசட்எஃப் மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்ட ஆடம்பர கார் மாடல்களும் சமந்தா இடத்தில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சமந்தா முதல் முறையாக மும்பை விமான நிலையத்தில் வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடன் காட்சியளித்திருக்கின்றார்.

முன்னதாக பார்த்த அனைத்து கார் மாடல்களைக் காட்டிலும் மிக உயரிய விலை மற்றும் அதிக லக்சூரி அம்சங்கள் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இருக்கின்றது. இந்த காரில் சிறப்பு சொகுசு வசதியாக மிருதுவான இருக்கை, பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையில் பயணித்தாலும் துளியளவும் குலுங்களை வழங்காத சஸ்பென்ஷன் மற்றும் வெளிப்புறத்தின் சத்தம் துளியளவும் கேட்காத கேபின் போன்ற பிரம்மிக்கை வைக்கும் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

காரில் பயணிக்கின்ற அனுபவத்திற்கு உல்லாச கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை இந்த அம்சங்கள் வழங்கும். இத்தகைய ஓர் தரமான காரிலேயே சமந்தா சமீபத்தில் காட்சியளித்திருக்கின்றார். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவர் மற்றும் 780 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரூ. 6.95 கோடி தொடங்கி ரூ. 7.95 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சில தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை சேர்க்கும்போது இதன் விலை இன்னும் பல மடங்கு உயர்ந்துக் காணப்படும். இத்தகைய ஓர் சொகுசு காரையே இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள் பலர் பயன்படுத்தி வருவகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்தி வரும் நடிகர்கள் சிலரின் பெயர்களை பின்வருமாறு பார்க்கலாம். இளைய தளபதி விஜய், சஞ்ஜய் தத், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார், ஷாருக் கான் உள்ளிட்டோர் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் இந்திய தொழிலதிபர்களான அம்பானி, பூஷன் குமார், லூலூ லூலூ குழுமத்தின் உரிமையாளர் யூசஃப் அலி உள்ளிட்டோர் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications