மஹிந்திரா தார் காரை ரொம்ப பிடிக்குமா?.. விலை குறைவான வெர்ஷன் விற்பனைக்கு வரபோகுது?..

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் தார் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த கார் மாடலின் விலை குறைவான வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார்-ம் ஒன்று. மிக அமோகமான வரவேற்பை நாட்டு மக்களிடம் இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. பழைய தலைமுறை தார் காருக்கு கிடைத்துக் கொண்டிருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வரவேற்பு இந்த புதிய தலைமுறை தாருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். அந்த அளவு அதிக எண்ணிக்கையில் இந்த கார் மாடல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

தார்

இந்த நிலையிலேயே தார் காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் விலை குறைவான வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்த தகவலை மஹிந்திரா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அண்மையில் 4 வீல் டிரைவ் லிவர் இல்லாத தார் சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் போன்ற படங்கள் வெளியாகி மலிவு விலை தார் காரின் வருகையை உறுதிப்படுத்தியது.

ஆமாங்க, 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட தார் காரே அண்மையில் கேமிராவின் கண்களில் சிக்கியது. இதற்கு பின்னரே நிறுவனம் குறைந்த விலையிலான தார் எஸ்யூவி கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகியது. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் மோட்டாரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த காரின் அறிமுகம் நாட்டில் அரங்கேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது இந்த டூ-வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட தார் டீலர்களின் யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்ஸ்யூவி 300 காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த 2 வீல் டிரைவ் அம்சம் கொண்ட தார் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ஆட்ப்ளூ ப்ளூட் (AdBlue Fluid) எனும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட 1.5 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 4 வீல் இயக்கம் கொண்ட தாரைக் காட்டிலும் 2 வீல் இயக்கம் கொண்ட தார் சற்று எடை குறைவானதாக இருக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம் பெறாத காரணத்தினாலேயே அதன் எடை குறைவாக உள்ளது. எடை மட்டுமே குறைவு கிடையாது. விலையும் சற்று குறைவாகவே இருக்கும்.

இந்த எஸ்யூவி காருக்கு வரி சலுகைகள் பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு. ஆகையால், மஹிந்திரா புதிய தார் இப்போது விற்பனையில் இருப்பவற்றைக் காட்டிலும் பல மடங்கு குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவானதாக இது இருந்தாலும் வழக்கமான தார் காரை போலவே கவர்ச்சியானதாகவும், அதிக சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் தார் எஸ்யூவி காரில் இரு விதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் எம்-ஸ்டால்லியன் மற்றும் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்-ஹாவ்க் என்கிற இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே இப்போது தார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றுடனேயே விரைவில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது. இரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற டிரான்ஸ்மிஷன் தேர்வே 1.5 லிட்டர் மோட்டாரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா தார் காரில் நவீன கால அம்சங்களாக எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், ஐபி54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரேடட் கேபின், தொடுதிரை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங், வட்ட வடிவ ஏசி வெண்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வட்ட வடிவ வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்பீக்கர்கள், பவர் விண்டோக்கள், க்ரூஸ் கன்ட்ரோல், சாவியில்லா நுழைவு, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2022, 19:49 [IST]
English summary
Affordable mahindra thar
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+