சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

பத்து வயது சிறுவனுக்கு அவரது வயதிற்கு மீறிய பரிசை அவரது மில்லியனர் தந்தை கொடுத்திருக்கின்றார். இந்த பரிசளிப்பு சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

சிறுவர்கள் வாகனம் இயக்குவதை எந்தவொரு நாடும் அனுமதிப்பதில்லை. இருப்பினும், பரவலாக சிறுவர்கள் வாகனம் இயக்கும் நிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் ஓர் சிறுவனுக்கு என்ன மாதிரியான பரிசு வழங்கக் கூடாதோ, அத்தகைய பரிசை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

பல மடங்கு விலையுயர்ந்த சூப்பர் காரை பரிசாக வழங்கி சிறுவனையும், நம்மையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா நாட்டிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. முஹம்மத் அவல் முஸ்தபா எனும் சிறுவனுக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு விலையுயர்ந்த லம்போர்கினி அவன்டேடர் (Lamborghini Aventador) கார் பரிசளிக்கப்பட்டிருக்கின்றது.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

Image Courtesy: mompha/Instagram

பரிசளிக்கப்பட்ட மஞ்சள் நிற சூப்பர் கார் முன்பு சிறுவன் நிற்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. லம்போர்கினி காரை பரிசு பெற்றதன் வாயிலாக அச்சிறுவன் ஆப்பிரிக்காவின் மிகவும் ரிச்சான சிறுவனாக மாறியிருக்கின்றார். இந்த கார் மட்டுமின்றி அவரிடத்தில் இன்னும் பல அரிய வகை கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

மாம்பா ஜூனியர் எனும் பெயரில் இச்சிறுவன் அறியப்படுகின்றார். இவர் பிரபல இன்டர்நெட் சூப்பர் ஸ்டார் இஸ்மைலியா முஸ்தபாவின் மகன் ஆவார். மாம்பா சீனியர் என்ற பெயரில் அறியப்படும் பிரபலமே இவர் ஆவார். இவரே தனது மகனின் 10வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 3 லட்சம் பவுண்டுகள் செலவு செய்து லம்போர்கினி அவென்டேடார் காரை வாங்கி, அதனை தற்போது அவர் பரிசாகவும் வழங்கியிருக்கின்றார்.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

இந்திய மதிப்பில் தோராயமாக இதன் விலை ரூ. 2.82 கோடி ஆகும். இதுபோன்று அதிக விலைக் கொண்ட கார்கள் சிறுவனிடத்திலும், அவரது தந்தையிடத்திலும் இருக்கின்றன. அவர்களது கார் கலெக்ஷனை கூடுதலாக சிறப்பிக்கும் பொருட்டே புதிய லம்போர்கினி அவென்டேடர் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

வாகன ஆர்வலர்கள் பலரின் கனவு வாகனமாக லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகள் அறியப்படுகின்றன. அதிலும், அவென்டேடார் போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பிரியர்கள் (வெறியர்கள்) அதிகம் என்றுகூட கூறலாம். இத்தகைய சூப்பர் காரே பத்து வயது சிறுவனுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே சிறுவனத்திடத்தில் பல லம்போர்கினி நிறுவன தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவென்டேடார் அவரது இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கார் மட்டுமின்றி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

மாம்பா சீனியர், அதாவது, சிறுவனின் அப்பா இஸ்மைலியா இரண்டுக்கும் அதிகமான முறை வரி ஏய்ப்பு காரணமாக காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருப்பினும், ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக அவர் தற்போது விங்கிக் கொண்டிருக்கின்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பத்து வயது மகனுக்கு மிக மிக விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

லம்போர்கினி அவென்டேடார் கார்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இக்கார் மாடலை முதன் முதலாக 2011லேயே லம்போர்கினி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. லம்போர்கினியின் பிற தயாரிப்புகளைப் போலவே வெகு விரைவாக பலரின் மனம் கவர்ந்த வாகனமாக அது மாறிவிட்டது.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

இதற்கு காரணம் லம்போர்கினி அவென்டேடாரின் பிரத்யேக தோற்றம் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறன்களே ஆகும். இக்காரில், வி12 ரக மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8250 ஆர்பிஎம்-ல் 700 பிஎச்பி பவரை உருவாக்கக் கூடியது ஆகும். அதேநேரத்தில், அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை அது கொண்டிருக்கின்றது.

சிறுவனுக்கு கொடுக்க கூடிய பரிசாங்க இது?.. பத்து வயது பயலுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...

அதுமட்டுமா, வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனையும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் கொண்டிருக்கின்றது. எனவேதான் இக்காருக்கு அமோகமான வரவேற்பை ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் வழங்கி வருகின்றனர். லம்போர்கினி நிறுவனம் இந்த கார் மாடலில் பன்முக தேர்வுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Africas richest kid gets worlds costliest super car lamborghini aventador as birthday gift
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X