உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

மழை வெள்ளத்தில் சிக்கிய பின்னர் காரில் ஆராய வேண்டிய ஐந்து முக்கிய கருவிகள் (பாகங்கள்) பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

இந்தியாவில் மழைக் காலம் தொடங்கியிருக்கின்றது. என்னதான் அரசு சார்பில் மழை நீர் வடியும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், மழை நீர் தேங்காத சாலைகளைக் காண்பது கடினமாக இருக்கின்றது. குறிப்பாக, தாழ்வான பகுதிகள் மழை நீரால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதில் அதிகம் அவதிக்குள்ளாவர்களாக தாழ்வான பகுதியில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள் இருக்கின்றனர்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

அவர்களது உடைமைகளுடன் சேர்த்து வாகனங்களும் மழை வெள்ளத்தில் பரிகொடுக்கும் நிலைமை ஏற்படுகின்றது. எனவேதான் மழை காலத்தின்போது வாகன உரிமையாளர்கள், குறிப்பாக, கார் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர். அதிக மழையின்போது தாழ்வான பகுதிகளுக்கு பதிலாக பாதுகாப்பான அல்லது உயரமான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதனால் அவற்றை மழை வெள்ள நீரில் பாதுகாக்க முடியும்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

என்னதான் பத்திரமாக பாதுாத்தாலும் சில தவிர்க்க முடியாத சூழல்களில் வாகனங்களில் வெள்ள நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகின்றது. இந்த மாதிரியான நேரத்தில் உங்களுடைய கார் மழை நீரால் மிகக் கடுமையாக பாதிப்படையலாம். இதை எப்படி சோதித்து பார்ப்பது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, கார் மழை வெள்ளத்தில் சிக்கிய பின்னர் ஆராய வேண்டிய காரின் முக்கிய கருவிகள் (பாகங்கள்) பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

இக்னிசன்:

கார்களுக்கு இக்னிசன் அமைப்பு மிக முக்கியமான ஒன்று. வாகனம் ஸ்டார்ட்டாக வேண்டும் எனில் இந்த அமைப்பு ஆரோக்கியமான நிலையில் இருத்தல் அவசியம். ஆனால், மழை வெள்ளத்தில் பாதிக்கப்படக் கூடிய முதல் அமைப்பாக இக்னிசன் சிஸ்டம் இருக்கின்றது. குறிப்பாக, இதன் ஸ்டார்டர் மோட்டாரே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றது. இது பாதிக்கப்படும் சிக்கல் பெரிது என்றே அர்த்தம்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

ஆகையால், மழை வெள்ளத்தில் மூழ்கிய காரில் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக இக்னிசன் சிஸ்டம் இருக்கின்றது. இந்த சிஸ்டத்தை சோதித்து பார்க்கின்றேன் என்கிற பெயரில் ஒரு சிலர் மழை வெள்ளத்தில் மூழ்கிய காரை, வெளியில் எடுத்த உடன், அதாவது, நீர் கொஞ்சம்கூட வடியாத நிலையில் ஸ்டார்ட் செய்ய தொடங்கிவிடுகின்றனர்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

இங்குதான் சிக்கல் மேலும் வலுவடைகின்றது. இக்னிசன் சிஸ்டம் மின்சாரத்தால் இயங்கும் கட்டமைப்பைக் கொண்டது. எனவேதான் மழை நீர் எளிதில் அதை பாதிக்கச் செய்கின்றது. எனவே, மழை நீர் முழுமையாக வடிந்த பின்னர், குறிப்பாக, கார் முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதி செய்த பின்னர், மிகவும் லேசாக ஓரிரு முறை மட்டுமே இக்னிசன் சிஸ்டத்தை சோதித்து பார்க்க வேண்டும்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

அப்போது, உங்களது வாகனம் ரெஸ்பான்ஸ் செய்தால் பிரச்னை இல்லை. அதுவே, எஞ்ஜின் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது இக்னிசன் நடைபெறுவதற்கான அறிகுறி துளியளவும் தெரியவில்லை என்றால் இந்த அமைப்பில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது என அர்த்தம். இந்த மாதிரியான நேரத்தில் இக்னிசனை மேலும் தொந்தரவு செய்யாமல், மெக்கானிக்கை அணுகுவதே ரொம்ப நல்லது.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

எஞ்ஜின்:

மழை நீரால் பாதிக்கப்படும் காரின் அடுத்த முக்கியமான பாகங்களில் ஒன்றாக எஞ்ஜின் இருக்கின்றது. ஓர் மனிதனுக்கு இதயம் சீராக இயங்குவது எந்தளவு முக்கியமோ அதே அளவு காருக்கு மிக முக்கிமானதாக எஞ்ஜின் இருக்கின்றது. இந்த முக்கியமான பாகத்திற்கு எதிரியாக மழை நீர் இருக்கின்றது. ஆகையால், மழை நீர் அதிகம் தேங்கியிருக்கும் பகுதியில் காரை செலுத்தும்முன் பல முறை யோசித்து பின்னர் பயணிக்கவும்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

ஒரு வேலை நீங்கள் வேறு வழியில்லாமல் மழை நீர் அதிகம் நிறைந்த சாலையில் நுழைந்துவிட்டால், சில நேரங்களில் சற்று வித்தியாசமான ஒலி எக்சாஸ்டில் இருந்து வெளியேற நேரிடும். அந்த மாதிரியான நேரங்களில் சிறிது நேரம் ஆக்சலரேஷனை அழுத்தி பிடித்தவாறு இருப்பது நல்லது. அது எக்சாஸ்ட் வாயிலாக புகுந்திருக்கும் மழை நீரை துளியளவும் தங்கவிடாமல் வெளியேற்ற உதவியாக இருக்கும். இருப்பினும், தொடர்ந்து அதேபோல் சத்தம் வந்துக் கொண்டே இருக்குமானால் சர்வீஸ் மையத்தின் உதவியை நாடுவதே நல்லது.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

எம்ஐடி லைட்டுகள்:

கார் மழை வெள்ளத்தில் நனைந்த பின்னரும் சில நேரங்களில் அது சீராக இயங்கலாம். ஆனால், இதை வைத்து அவ்வாகனம் எந்த பாதிப்பை சந்திக்கவில்லை என நினைத்துக் கொள்ள வேண்டும். காரை ஸ்டார்ட் செய்த உடன் சில நேரங்கள் உங்கள் க்ளஸ்டரும் தகவலுக்காக காத்திருப்பது நல்லது. ஏதேனும் பாகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த தகவலை க்ளஸ்டரில் உள்ள எச்சரிக்கை லைட்டுகள் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

எலெக்ட்ரானிக்ஸ்

மேலே கூறியதுதாங்க, தண்ணீர் போன்ற மிகப்பெரிய எதிரி மின்சாதன பொருட்களுக்கு வேறு எதுவும் இருக்காது. இதனால், ஸ்டார்டர் மோட்டார் மட்டுமல்ல காருக்குள் இருக்கும் சில முக்கிய மின்சாதன கருவிகளும் வேலை செய்யாமல் போகலாம். குறிப்பாக, ஹெட்லைட்டுகள், பவர் விண்டோக்கள், ஸ்டீரியோ சிஸ்டம், சன் ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வேலை செய்யாமல் போக பல மடங்கு வாய்ப்பு இருக்கின்றது.

உங்க வாகனம் மழை வெள்ளத்துல மூழ்கிருச்சா... உடனே கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய கார் பாகங்கள்!

ஏபிஎஸ், இஎஸ்சி, ஏர் பேக்...

இதுமாதிரியான அம்சங்களும் மழை நீரால் சில நேரங்களில் பாதிக்கப்படுவதுண்டு. இவை மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகள் என்பதால் இந்த அனைத்து அம்சங்களும் முதலில் மழை நீரால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இவற்றின் ஏதேனும் பிரச்னை என்றாலும் அதுகுறித்த தகவலை எம்ஐடி க்ளஸ்டர் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலே பார்த்த எந்த சிக்கலும் நம்முடைய வாகனத்திற்கு ஏற்படக் கூடாது என்றால், வாகனத்தை மழை நீரிடம் இருந்து விளக்கி வைப்பதே நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2022, 16:31 [IST]
English summary
After flood here is what you need to check in your car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+