தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் பழங்கால கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார். மிக மிக அரிய வகை கார்களில் ஒன்றாக அறியப்படும் நிஸான் 1 டன் காரே வாங்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் மஹிந்திர சிங் தோனி மிக பெரிய வாகன காதலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டிருப்பதைப் போலவே அதிக பற்றை வாகனங்கள் மீதும் அவர் வைத்திருக்கின்றார். எனவேதான் அவரின் வாகன நிறுத்துமிடத்தில் சற்றே வித்தியாசமான வாகனங்கள் தென்படுகின்றன.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

பல அரிய வகை வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன. கார் மற்றும் பைக் என இரு ரக வாகனங்களும் அவரிடத்தில் எக்கசக்கமாக உள்ளன. இதில், பல சிறப்புமிக்க வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தோனி இடத்தில் இருக்கும் மிக முக்கியமான அரிய வகை கார்களில் ஒன்றாக நிஸான் 1 டன் இருக்கின்றது.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இக்கார் ஜோங்கா என்ற பெயரிலும் அறியப்படுகின்றது. இந்த வாகனம் பிரத்யேகமாக இந்தியன் ஆர்மிக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மிகவும் முரட்டுத் தனமான மற்றும் பிரமாண்ட உருவம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதன் விற்பனை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இருப்பினும், நாட்டில் குறிப்பிட்ட சில வாகன பிரியர்கள் நிஸான் 1 டன் காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவராக சமீபத்தில் தோனி இணைந்திருந்த நிலையில் தற்போது புதிதாக மற்றுமொரு கிரிக்கெட் விளையாட்டு வீரரும் இணைந்திருக்கின்றார்.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

மும்பை இந்தியன் அணியைச் சேர்ந்த சூர்ய குமார் யாதவ், இவரே தற்போது நிஸான் 1 டன் அரிய வகை காரை வாங்கியவர் ஆவார். இக்காரை வாங்கியதுகுறித்த தகவலை அவரே அவர் இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

ஸ்கை என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் கடுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிஸான் 1 டன் காரை தனக்காக வாங்கியிருக்கின்றார். பச்சை நிறத்தில் ஆங்கில திரைப்படத்தில் ஹல்க் மனிதனை போல் இது காட்சியளிக்கின்றது. ராணுவத்துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனம் இது என்பதால் இந்த வாகனம் ஏற்கனவே மிக முரட்டுத் தனமானதாக காட்சியளிக்கும்.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

இதனை பல மடங்கு அதிகமாக்கும் வகையிலேயே ஸ்கை வாங்கியிருக்கும் நிஸான் 1 டன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. ஜபல்புர் ஆர்டினன்ஸ் மற்றும் கன் கேரியஜ் அசெம்பிளி இக்காரை உருவாக்கியதனாலயே இக்காரை பலர் ஜோங்கா என்றழைத்து வருகின்றனர்.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

பச்சை நிறம், எல்இடி மின் விளக்குகள், புதிய டயர்கள் மற்றும் க்ரில் என பல ரீஸ்டோர் செய்யப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றினால் இன்னும் பல முரடனைப் போல் நிஸான் 1 டன் காட்சியளிக்கின்றது. 1960ம் ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு அதிகளவில் இந்த வாகனமே ஈடுபடுத்தப்பட்டது.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

ராணுவ வீரர்களை கொண்டு செல்லும் வாகனமாகவும், ஆம்புலன்ஸாகவும், துப்பாக்கி மற்றும் பிற பொருட்களை ஏற்றி செல்லுதல் என பல நிலைகளில் நிஸான் 1 டன் ராணுவ துறையில் பயனளித்திருக்கின்றது. இத்தகைய பணியில் பல ஆண்டுகள் இந்த வாகனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

தோனியை போலவே மிக மிக பழங்கால காரை வாங்கிய கிரிக்கெட் வீரர்... யாருனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!

நிஸான் 1 டன் காரில் 3.9 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும் 264 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 3 ஸ்பீடு மேனுவல் மற்றும் நான்கு வீல்கள் இயக்கம் ஆகிய திறன்களும் இக்காரில் வழங்கப்பட்டன. இதுமாதிரியான வசதிக் கொண்ட நிஸான் 1 டன் காரே தல தோனியிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, January 31, 2022, 19:30 [IST]
English summary
After that dhoni cricketer surya kumar yadav buys nissan 1 ton
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+