தொழிற்சாலையை இழுத்து மூடும் சுஸூகி! இவங்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

பாகிஸ்தானில் இறக்குமதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டிலிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வரிசையாக தங்கள் தொழிற்சாலைகளை மூடி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

இந்தியாவைப் போல் பாகிஸ்தான் நாடும் ஆட்டோமொபைல் துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு நாடு தான். அங்கு இந்தியாவில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீப நாட்களாகப் பாகிஸ்தான் நாட்டில் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அந்நாட்டில் பல ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலையை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையை இழுத்து மூடும் சுஸூகி! இவங்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் இண்டஸ் மோட்டார் கம்பெனி, இந்நிறுவனம் டொயோட்டா பிராண்டில் உள்ள கார்களை பாகிஸ்தானில் தயாரித்து விற்பனை செய்து கிறது. இந்நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முக்கியமான காரணம் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ளது சிக்கல் அதற்காக வழங்கப்படும் அனுமதி காலதாமதம் ஆவதால் உதிரிப் பாகங்கள் இல்லாமல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டாவை தொடர்ந்து அடுத்ததாக சுஸூகி நிறுவனம் தனது ஆலையை மூட முடிடு செய்துள்ளது. இந்நிலையில் சுஸூகி நிறுவனத்திடம் தற்போது உள்ள ஸ்டாக்கை வைத்து டிசம்பர் மாத இறுதி வரை உற்பத்தியைச் செய்ய முடியும். ஆனால் ஜனவரி மாதம் உற்பத்தியைத் துவங்க முடியாது என்பதால் ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை தனது ஆலையை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இறக்குமதி மீது இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதற்குப் பாகிஸ்தான் நாட்டின் பணத்தின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக மிகவும் குறைந்துள்ளது இதுதான் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் சுஸூகி நிறுவனம் கார்கள், பிக்கப் வேன்கள், 4X4 மற்றும் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து செய்து வருகிறது. இந்த அத்தனை தயாரிப்புகளின் உற்பத்தியும் நிறுத்தப்படவிருக்கிறது.

இதே போலப் பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டுவரும் மிலட் டிராக்டர் நிறுவனம் தனது உற்பத்தியையும் இதே பிரச்சனைக்காகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் போது டாலருக்கு நிகராக பாகிஸ்தான் ரூபாயைக் கொடுத்து உதிரிப் பாகங்களை வாங்க வேண்டும். தற்போது பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் அதிகமாகப் பணம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இதனால் வாகன தயாரிப்பிற்கான விலை அதிகமாகிறது. இது போகப் பண வீக்கம் காரணமாக அந்நாட்டில் வரி மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாகியுள்ளது. இதைச் சமாளித்து பாகிஸ்தானில் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்ய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களின் விலை அதிகமாகிறது. இதனால் பல நிறுவனங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து தங்கள் தொழிலை நடத்த யோசித்து வருகின்றனர். நிலைமை இப்படியே நீடித்தால் பல நிறுவனங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

Article Published On: Wednesday, December 28, 2022, 13:59 [IST]
English summary
After Toyota Suzuki stopped production in Pakistan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+