50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

புதுப்பிக்கப்பட்ட எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மின்சார கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வரும் மின்சார கார் மாடல்களில் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி (MG ZS EV) மாடலும் ஒன்று. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனே இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இக்கார் இன்று (மார்ச் 7) விற்பனைக்கு வந்திருக்கின்றது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

பன்முக மாற்றங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்களுடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 22 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுவே ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். ஆனால், இந்த ஆரம்ப நிலை வேரியண்ட் 2022 ஜூலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கும்.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

அதேநேரத்தில், இதன் உயர்நிலை வேரியண்டின் டெலிவரி பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், இப்போதைய நிலைக்கு ஒற்றை வேரியண்ட் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் ஆகிய இரு வேரியண்டுகளிலேயே எம்ஜி இசட் இவி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில் எக்ஸைட்டின் அறிமுகமே தள்ளிப் போடப்பட்டுள்ளது. மிக விரைவில் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கும் எக்ஸ்க்ளூசீவ் வேரியண்டின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

இந்த எக்ஸ்க்ளூசீவ் வேரியண்டின் விலை 25 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஆகும். எம்ஜி நிறுவனம் புதுப்பித்தலின் அடிப்படையில் இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரை எல்இடி மின் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றது. இது காருக்கு மிகவும் ஷார்ப்பான தோற்றத்தை வழங்குகின்றது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

பிரபல அஸ்டர் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே கவர்ச்சிகரமான எல்இடி லைட்டே புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், காரின் முகப்பு பகுதி புதிய தோற்றத்திலான பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது குரோம் இன்செர்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

மேலும், முன்னதாக எம்ஜி எம்பளத்தை திறந்தால் காரை சார்ஜ் செய்வதற்கான போர்ட் இடம் பெற்றிருக்கும். இந்த அம்சம் தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. அது, தனியாக எம்ஜி எம்பளத்திற்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது. முகப்பு பகுதியைப் போல் பக்கவாட்டு பகுதியையும் அழகுப்படுத்தும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், ஐந்து ஸ்போக் அம்சத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

இதுமட்டுமின்றி எந்தவொரு மின்சார காரிலும் இடம் பெற்றிருக்காத வகையில் பெரிய அளவிலான பனோரமிக் சன்ரூஃப் இசட்எஸ் இவி காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், பன்முக பிரீமியம் அம்சங்கள் எலெக்ட்ரிக் காராக புதுப்பிக்கப்பட்ட இசட்எஸ் இவி காட்சியளிக்கின்றது.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

இக்காரின் திறன் வெளிபாட்டிலும் எம்ஜி மாற்றத்தைச் செய்திருக்கின்றது. முன்னதாக 44 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இசட்எஸ் இவி-யில் பயன்படுத்தப்பட்டது. இதனை நிறுவனம் தற்போது மாற்றியிருக்கின்றது. புதிதாக 50.3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

முந்தைய வெர்ஷனின் உச்சபட்ச ரேஞ்ஜ் திறன் 419 கிமீ ஆகும். இந்த மின்சார காரில் 176 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், காரை மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

50.3 kWh பேட்டரி பேக்குடன் எம்ஜி இசட்எஸ் இவி விற்பனைக்கு அறிமுகம்! ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும்!

கூடுதல் சிறப்பு வசதியாக எம்ஜி இசட்எஸ் மின்சார காரில் அடாஸ் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம், பின்பக்க இருக்கையாளர்களுக்கும் ஏசி வெண்டுகள் என பல்வேறு அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2022, 13:03 [IST]
English summary
All new 2022 mg zs ev launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+