தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

ஆஃப்-ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திராவின் தார் எஸ்யூவி விளங்குகிறது. அதிலிலும் குறிப்பாக, 2020இன் இறுதியில் இதன் புதிய தலைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு இதன் விற்பனை மேலும் எகிறியது. ஆனால் தாரில் 3-கதவுகள் மட்டுமே வழங்கப்படுவதால் அதிகளவில் பயணிகள் இதில் பயணிக்க முடிவதில்லை என்கிற கருத்து உள்ளது.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

இதனை சரிச்செய்ய, மஹிந்திராவும் 5-கதவு தாரின் வடிவமைப்பு பணியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விற்பனையில் இதன் போட்டியாக இருக்கும் ஒரே வாகனம் ஃபோர்ஸ் மோட்டார்ஸின் குர்கா ஆகும். உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான இதுவும் குர்காவின் 5-கதவு வெர்சனின் வருகையை உறுதிப்படுத்தி உள்ளது.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

இந்த நிலையில் மிக சமீபத்தில் 5-கதவு குர்காவின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் அறிமுகம் மீண்டும் உறுதியாகிறது. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை கீழே காணலாம். இதன் வாயிலாக நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

குர்காவின் 5-கதவு வெர்சன் சி ஏணி சட்டக சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதே சேசிஸை தான் தற்போதைய 3-கதவு குர்காவிலும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்த சேசிஸை எதிர்காலத்திற்கும் தொடரும் முடிவில் இந்த நிறுவனம் இருப்பதை அறிய முடிகிறது.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

ஒரே சேசிஸின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதால் வழக்கமான 3-கதவு குர்காவில் கூடுதலாக பின்பகுதி சேர்க்கப்பட்டது போன்றுதான் இருக்கும். இந்த வாகனத்தின் தற்போதைய சோதனை ஓட்டத்தில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தெரியாதப்படி வாகனம் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்குமுன் நமக்கு கிடைத்திருந்த ஸ்பை வீடியோவில் வெள்ளை நிறத்தில் 5-கதவு குர்கா காட்சியளித்திருந்தது.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

தற்போதைய ஸ்பை வீடியோவில் இந்த எஸ்யூவி வாகனத்தின் உட்புற கேபினை ஓரளவிற்கு மங்கலாக பார்க்க முடிகிறது. இதன்படி பார்க்கும்போது, 5-கதவு குர்காவில் ஃபோர்ஸ் நிறுவனம் கேப்டன் இருக்கைகளை 3-வது வரிசையில் வழங்கலாம் என தோன்றுகிறது. மொத்தமாக இந்த 5-கதவு ஆஃப்-ரோடு வாகனத்தில் 6-இல் இருந்து 7 பேர் வரையில் அமர முடியும். மத்தியில் மேசை இருக்கை கொடுக்கப்படலாம்.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

மஹிந்திரா எக்ஸ்யூவி700-ஐ போல், 6-இருக்கை தேர்வில் மட்டுமே இரு கேப்டன் இருக்கைகள் வழங்கப்படும். 7-இருக்கை தேர்வில் கேப்டன் இருக்கைகள் கிடைக்க வாய்ப்பில்லை. மற்றப்படி முன்பக்கத்தில் டேஸ்போர்டில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறோம். இதனால், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய வழக்கமான 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையே 5-கதவு குர்காவும் பெற்று வரலாம்.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

இத்துடன் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய திரை, மேனுவல் ஏசி, பவர் ஜன்னல்கள், மைய லாக்கிங், ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றையும் இந்த புதிய குர்காவில் எதிர்பார்க்கலாம். பின்பக்கத்தில் புதிய தொகுப்பில் கதவுகள் பொருத்தப்படலாம். அத்துடன் கடைசி ஜன்னல் கண்ணாடி பகுதியும் புதுமையான டிசைனில் வழங்கப்படும்.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

வாகனத்தின் நீளம் அதிகரிப்பதால், சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் 2.4 மீட்டரில் இருந்து 2.8 மீட்டராக அதிகப்படுத்தப்பட உள்ளது. வீல்பேஸை 400 மில்லி மீட்டர்கள் என்ற அளவில் அதிகரிக்கவே ஃபோர்ஸ் விரும்பும். இதன் வாயிலாக மூன்றாவது இருக்கை வரிசையில் அமரும் பயணிகளுக்கு நன்கு இடவசதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

வெளிப்பக்கத்தில், ஒட்டுமொத்த தோற்றத்தில் 3-கதவு குர்காவையே 5-கதவு குர்காவும் ஒத்து காணப்படும் என எதிர்பார்க்கிறோம். குர்கா வாகனத்திற்கே உண்டான பெட்டக வடிவம் அதன் 5-கதவு வெர்சனிலும் தொடரப்பட்டுள்ளது. இயக்கத்தின்போது வாகனத்தின் சாலை நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தாருக்கு போட்டியாக உருவாகும் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா!! மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை!

பின்பக்கத்தில் மறைக்கப்பட்டு இருப்பினும் வழக்கம்போல் செவ்வக வடிவிலேயே டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது. அதேபோல் இயக்க ஆற்றலை வழங்கவும் 3-கதவு குர்காவின் 2.6 லிட்டர் டீசல் என்ஜினே புதிய 5-கதவு வெர்சனிலும் பொருத்தப்படலாம். அதிகப்பட்சமாக 91 எச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த மெர்சிடிஸ்-பென்ஸின் டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 2, 2022, 14:42 [IST]
English summary
All new force gurkha 5 door model caught in camera while doing test runs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+