மைலேஜை வழங்குவதில் இந்த 5எஸ்யூவி கார்களுமே பெஸ்டானவை! ஒன்னு இருந்தாகூட பெட்ரோல் விலை உயர்வு கவலையே இருக்காது!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 எஸ்யூவி கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களை விரும்பாதவதர்கள் இருக்கு முடியுமா என்ன. இந்தியர்கள் பெரும்பாலானோர் அதிக மைலேஜை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றனர். எனவேதான் வாகன உற்பத்தியாளர்கள் அதிகம் மைலேஜை தரக் கூடிய வாகனங்களை இந்தியாவில் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

எனவே தற்போது சந்தையில் நல்ல மைலேஜை தரக் கூடிய கார்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றில், மிக சூப்பரான மைலேஜ் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து எஸ்யூவி கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தனி தனியாக தொகுத்து வழங்கியிருக்கின்றோம். புதிதாக அதிக மைலேஜை தரும் காரை வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் விதமாக இந்த பட்டியலை தயாரித்து வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் (Maruti Grand Vitara Hybrid)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக கிராண்ட் விட்டாரா இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரையில் மைலேஜ் தரும். மாருதி நிறுவனம் இந்த காரை இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என்கிற இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளிலேயே கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வே அதிக மைலேஜை தர கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த தேர்வானது ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் எனும் இரு ட்ரிம்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த காரின் விலை விபரத்தைப் பட்டியாலகக் கீழே காணலாம்.
| Variant | Monotone | Dual Tone |
| Sigma Smart Hybrid MT | ₹10,45,000 | - |
| Delta Smart Hybrid MT | ₹11,90,000 | - |
| Delta Smart Hybrid AT | ₹13,40,000 | - |
| Zeta Smart Hybrid MT | ₹13,89,000 | - |
| Zeta Smart Hybrid AT | ₹15,39,000 | - |
| Zeta+ Intelligent Electric Hybrid eCVT | ₹17,99,000 | ₹18,15,000 |
| Alpha Smart Hybrid MT | ₹15,39,000 | ₹15,55,000 |
| Alpha Smart Hybrid AT | ₹16,89,000 | ₹17,05,000 |
| Alpha Smart Hybrid ALLGRIP SELECT MT | ₹16,89,000 | ₹17,05,000 |
| Alpha+ Intelligent Electric Hybrid eCVT | ₹19,49,000 | ₹19,65,000 |

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder):
மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்த இரண்டையும் வெவ்வேறு நிறுவனங்களின் எம்பளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே கார் என கூறலாம். இரு கார்களும் இரு நிறுவனங்களின் கூட்டணியின் வாயிலாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், மேலே பார்த்த மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவின் அனைத்து சிறப்புகளையும் டொயோட்டா ஹைரைடரிலும் நம்மால் காண முடிகின்றது.

இதேபோல் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என்கிற தேர்வும் இந்த காரில் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச மைலேஜ் திறனும் 27.97 கீமீட்டரே ஆகும். இதே மைலேஜ் திறனையே மாருதியின் கிராண்ட் விட்டாராவும் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரின் விலை விபரத்தைப் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்:
| Toyota Urban Cruiser Hyryder Price | |
| Grade Name | Price |
| G AT 2WD NEO DRIVE | ₹15,54,000 |
| S AT 2WD NEO DRIVE | ₹13,48,000 |
| V MT AWD NEO DRIVE | ₹17,19,000 |
| V MT 2WD NEO DRIVE | ₹15,89,000 |
| G MT 2WD NEO DRIVE | ₹14,34,000 |
| S MT 2WD NEO DRIVE | ₹12,28,000 |
| E MT 2WD NEO DRIVE | ₹10,48,000 |
| V eDrive 2WD HYBRID | ₹18,99,000 |
| G eDrive 2WD HYBRID | ₹17,49,000 |
| S eDrive 2WD HYBRID | ₹15,11,000 |
| V AT 2WD NEO DRIVE | ₹17,09,000 |

கியா சொனெட் (Kia Sonet Diesel):
கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் சொனெட்டும் ஒன்று. இந்த கார் மாடலின் டீசல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டே அதிக மைலேஜை தரக் கூடியதாகக் இருக்கின்றது. இதன் மைலேஜ் திறன் ஒரு லிட்டருக்ககு 24.1 கிமீ ஆகும். இந்த கார் அதிக மைலேஜை வழங்கக் கூடியது மட்டுமில்லைங்க. அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமும்கூட. எனவேதான் இந்தியாவில் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே சொனெட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரின் ஆரம்ப விலை ரூ. 9.05 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue Diesel):
அதிகம் மைலேஜ் தரும் எஸ்யூவி கார்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் பிடித்துள்ளது. லிட்டர் ஒன்றிற்கு 23.4 கிமீ மைலேஜை வழங்கும் திறனை இக்கார் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பரான மைலேஜ் திறனே இந்தியாவின் நான்காவது மிக சிறந்த மைலேஜ் தரும் கார் என்ற மகுடத்தை வென்யூவிற்கு பெற்று தந்திருக்கின்றது. இந்த வாகனம் ரூ. 10 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த எஸ்யூவி வாகனத்தை பன்முக மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. இதில், டீசல் மோட்டாரே அதிக மைலேஜை தரக் கூடியதாக உள்ளது.

டாடா நெக்ஸான் (Tata Nexon Diesel):
டாடா மோட்டார்ஸின் டாப் செல்லிங் கார் மாடல் இதுவே ஆகும். அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் அதிக சிறப்பு தொழில்நுட்ப வசதியைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனத்தின் டீசல் மோட்டார் கொண்ட வேரியண்ட் லிட்டர் ஒன்றிற்கு 21.5 கிமீ மைலேஜை தரக் கூடியதாக இருக்கின்றது. இக்காரின் ஆரம்ப விலை ரூ. 7.60 லட்சம் ஆகும்.
மேலே பார்த்த இந்த கார் மாடல்களே இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் எஸ்யூவி ரக கார்களாகும்.


Click it and Unblock the Notifications








