34 கிமீ மைலேஜ்! இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு காரா! மாருதி ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் மக்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக இருப்பதால், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அத்தகைய வாகனங்களை அதிகளவில் களமிறக்க தொடங்கியுள்ளன.

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனமான மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி (Maruti Suzuki Alto K10 CNG) தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

34 கிமீ மைலேஜ்! இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு காரா! மாருதி ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் மக்கள்

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் 13வது சிஎன்ஜி கார் ஆகும். இந்த செய்தியில், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி கார் குறித்த மிகவும் முக்கியமான தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி காரை வாங்குவதற்கு முன்பு நீங்கள் இந்த விஷயங்களை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

இன்ஜின் & கியர் பாக்ஸ் (Engine & Gearbox)

இந்த காரில், 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், K10C சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 56 பிஹெச்பி பவரையும், 82.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 64.3 பிஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் (Mileage)

பெட்ரோலில் இயங்க கூடிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் ஒரு லிட்டருக்கு 24.9 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கும். ஆனால் ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 33.85 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியதாக உள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில், சிறப்பான மைலேஜ் கிடைக்க கூடிய ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஆல்டோ கே10 சிஎன்ஜி சிறந்த தேர்வாக இருக்கும்.

விலை மற்றும் வேரியண்ட்கள் (Price & Variants)

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். அது VXi வேரியண்ட் ஆகும். இதன் விலை 5.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிறப்பான மைலேஜை வழங்க கூடியது என்பதால், இந்த விலைக்கு புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி கார் மதிப்பு வாய்ந்த ஒரு ஆப்ஷனாகவே கருதப்படுகிறது.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: தெய்வம்யா நீங்க! பேஸ்புக், ட்விட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடவுளாக மாறிய டாடா! உலகமே பாராட்டுது!இதை மிஸ் பண்ணீடாதீங்க: தெய்வம்யா நீங்க! பேஸ்புக், ட்விட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடவுளாக மாறிய டாடா! உலகமே பாராட்டுது!

வசதிகள் (Features)

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 2 ஸ்பீக்கர்களுடன் பேஸிக் ஆடியோ சிஸ்டம், யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், முன் பகுதியில் பவர் விண்டோக்கள் மற்றும் ஹீட்டர் உடன் ஏர் கண்டிஷனர் ஆகிய வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை. அத்துடன் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் இந்த புதிய மாடலில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

இதில், இபிடி உடன் ஏபிஎஸ், 2 ஏர்பேக்குகள் மற்றும் ரியர் சீட் பெல்ட்கள் ஆகியவை முக்கியமானவை. அத்துடன் இந்த கார் புதிய ஹார்டெக்ட் (HEARTECT) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை (Maruti Suzuki Brezza CNG) வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
All the details you need to know about maruti suzuki alto k10 cng
Story first published: Saturday, November 19, 2022, 23:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X