ரகசியம் உடைஞ்சுபோச்சு... ஆப்பிள் கார் நாம் நினைச்சுகூட பாக்காத அளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதாம்!

செல்போன் உலகில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனம் வெகு விரைவில் ஆட்டமொபைல்ஸ் பிரிவிலும் தனது கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. முதலில் நிறுவனம் பேட்டரியால் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் காரையே இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்குள் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆப்பிள் செல்போன் பிரியர்கள் மத்தியில் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் கார் பிரியர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் மற்றுமொரு முக்கிய தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவலே வெளியாகி உள்ளது.

கார்

குறிப்பு: காரின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

100,000 அமெரிக்க டாலர்கள் எனும் விலையில் ஆப்பிள் மின்சார கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகவே தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இது யாருமே எதிர்பார்க்காத குறைவான விலை ஆகும். ஜிஎம் ஹம்மர் இவி மற்றும் மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் செடான் ரக கார்கள்கூட ஆப்பிள் காரைவிட அதிக விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆமாங்க, இந்த கார்கள் ஆப்பிள் காரைக் காட்டிலும் சற்று அதிக விலையிலேயே விற்பனைக்கு வர உள்ளது. ஆப்பிள் நிறுவனம் புராஜெக்ட் டைடன் எனும் பெயரில் இந்த கார் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது.

இந்த பணி முடிவுறும் நிலையில் இருப்பதாக அண்மை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வெகு விரைவில் ஆப்பிள் கார் இந்த உலகில் பொதுப் பார்வைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். இந்த மாதிரியான சூழலே தற்போது நிலவுகின்றது. அதேவேலையில், ஆப்பிள் நிறுவனம் இந்த கார் பற்றிய எந்த ஒரு முக்கிய தகவலையும் வெளியிடவில்லை. அனைத்து தகவல்களும் ராணுவ ரகசியம் போல் காக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக என்ன மாதிரியான பேட்டரி பேக், என்ன மாதிரியான மோட்டார், கட்டமைப்பு மற்றஉம் சிறப்புகள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றது என்பது தெரியாமலே உள்ளது. அதேநேரத்தில், எந்தவொரு மின்சார காரிலும் பயன்படுத்தப்படாத அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆப்பிள் மின்சார காரில் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், அரே ஆஃப் லிடர் மற்றும் ரேடார் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல நவீன கால அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன. இதனால்தான் இந்த காருக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக தென்படுகின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார கார்களைக் காட்டிலும் மிகுந்த சூப்பரான காராக உருவாக்கப்பட்டு வருகின்றது. செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் கார் மட்டுமே மின்வாகன உற்பத்தியில் களமிறங்கவில்லை. ஏற்கனவே ஜியோமி, சோனி, எல்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களும் மின்சார கார்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

இந்த நிலையிலேயே மிகக் குறைவான விலையிலேயே ஆப்பிள் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த கார் மின்சார கார் 1.2 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது வெளிகியிருக்கும் தகவல்கள் ஆப்பிள் எலெக்ட்ரிக் கார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 82.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வர இருக்கின்றது. எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணியை நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலேயே கையில் எடுத்தது. ஆனால், அந்த திட்டத்தை கை விட்டது. இதன் பின்னரே மீண்டும் மின்சார கார் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்தது. தன்னாட்சி இயக்கம் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காராக இது இந்த புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் கார் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி ஆகிய முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்களின் மின்சார காருக்கு ஆப்பு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது உலகளவில் மின்சார கார்களுக்கு செம்ம டிமாண்ட் நிலவிக் கொண்டு உள்ளது. குறிப்பாக, சொகுசு ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உலகை மையமாகக் கொண்டு களமிறங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், புதுமுக நிறுவனமாக ஆப்பிள்-ம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது கால் தடத்தை பதிக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 13, 2022, 19:58 [IST]
English summary
Apple car cost details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+