செம்ம கெத்தான சம்பவத்தை செய்த ஏஆர் ரஹ்மானின் மகள்கள்... தமிழ் திரையுலகமே மிரண்டு நிக்குது!

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையுமே மிரள செய்யும் வகையில் இசைப் புயல் ஏர்ஆர் ரஹ்மானின் மகள்கள் விலையுயர்ந்த கொள்முதலை செய்திருக்கின்றனர். அது என்ன?, அவர்கள் புதிதாக வாங்கியிருக்கும் அந்த பொருளின் சிறப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான், 'லால் சலாம்' படத்திற்கான இசை அமைப்பதில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஓர் கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் தோன்ற இருக்கின்றார். இந்த படத்தை லைகா புரடெக்சன் நிறுவனமே தயாரிக்க இருக்கின்றது.

ஏஆர் ரஹ்மான்

இந்த படத்திற்காகவே மிக பிசியாக பணியாற்ற தொடங்கியிருக்கின்றார் ஏர்ஆர்ஆர். அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் அவர் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் வீடியோ பதிவை அவர் வெளியிட்டிருந்தார். லால் சலாம் படத்திற்காக இசை அமைக்கும் வீடியோவே அது. அந்த நேரத்தில் அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உடனிருந்தார். இந்த வீடியோ ஏஆர் ரஹ்மானினின் ஃபேன்கள் மத்தியில் அதிக வேகத்தில் டிரெண்டாகியது.

இந்த நிலையில் இணையத்தில் புயலை ஏற்படுத்தும் விதமாக இந்த இசைப் புயல் மற்றுமொரு பதிவை போட்டிருக்கின்றார். தன்னுடைய மகள்கள் மிக மிக விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருப்பதையே அந்த பதிவின் வாயிலாக ஏஆர் ரஹ்மான் தெரியப்படுத்தியிருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கதீஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் ஆகிய இருவரும் விலையுயர்ந்த காருக்கு முன்னாடி போஸ் கொடுக்கும் படத்தை ஏஆர்ஆர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஏஆர் ரஹ்மானுக்கு மொத்தம் 3 பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களில் கதீஜா ரஹ்மான் இசைக்கலைஞர் மற்றும் ஏஆர் ரஹ்மான் அறக்கட்டளையின் இயக்குனராக உள்ளார். மற்றவர்கள் பின்னணி பாடல் மற்றும் இசை தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஏஆர் ரஹ்மானின் மகள்கள் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி அசத்தியிருக்கின்றனர். அவர்கள் வாங்கியிருப்பது போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராகும்.

இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பதன் வாயிலாக, இந்திய அரசின் மாசு குறைப்பு முயற்சியில் ஏர்ஆர் ரஹ்மான் குடும்பத்தினரும் தங்களின் பங்களிப்பை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மிக அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களில் போர்ஷே நிறுவனத்தின் இந்த தயாரிப்பும் ஒன்றாகும். இந்த காரை போர்ஷே நிறுவனம் 18 க்கும் அதிகமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில், ஜென்டியன் ப்ளூ மெட்டாலிக் ஷேடிலான தேர்வை ஏர்ஆர்ஆரின் மகள்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த காரின் தற்போதைய சந்தை மதிப்பு இரண்டு கோடிக்கும் அதிகமாகும். ஆமாங்க, இந்த கார் மாடல் ரூ. 1.53 கோடி தொடங்கி ரூ. 2.34 கோடி வரையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த ஆடம்பர எலெக்ட்ரிக் காரையே ஏஆர் ரஹ்மானின் மகள்கள் வாங்கியிருக்கின்றனர்.

போர்ஷே நிறுவனம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டிலேயே அதன் எலெக்ட்ரிக் காரை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. டேகேன் ஆர்டபிள்யூ, டேகேன் 4 எஸ், டேகேன் டர்போ மற்றும் டேகேன் எஸ் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் எலெக்ட்ரிக் காரை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. டேகேன் டர்போ என்ற உடன் பெட்ரோல் மோட்டார் கொண்ட தேர்வு என நினைத்துக் கொள்ள வேண்டாம். அது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் மட்டுமே ஆகும். வேரியண்டிற்காக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேலையில், ஒவ்வொறு வேரியண்டும் தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் உருவ அமைப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. இவற்றில் டர்போ எஸ் என்பதே டேகேனின் டாப் எண்ட் பதிப்பாகும். இந்த பதிப்பில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. முன் புற மற்றும் பின் புற அச்சுகளில் தனி தனியாக மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே காரை அதிக வேகத்தில் இயக்கச் செய்கின்றது. இந்த காரில் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிமீ ஆகும். காற்றை துளியளவும் மாசுபடுத்தாமல் இந்த அளவு சூப்பரான வேகத்தில் போர்ஷே டேகேன் ஸ்போர்ட்ஸ் இவி கார் இயங்கும். இத்தகைய காரை வாங்கியிருப்பதனாலேயே அனைவரும் ஏஆர்ஆரின் மகள்களை வாழ்தத்த் தொடங்கியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ar rahman daughters buys porsche taycan electric sports car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X