1180 பிஎச்பி திறனுடைய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் வெளியீடு... எலெக்ட்ரிக் மோட்டார்-பெட்ரோல் டர்பைன் 2லும் ஓடும்!
ஏரியல் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியீடு செய்துள்ளது. இதன் ஆச்சரியமளிக்கும் திறன்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான ஏரியல் (Ariel) அதன் புதுமுக ஹைப்பர்கார் (Hipercar) -ஐ வெளியீடு செய்திருக்கின்றது. இது எலெக்ட்ரிக் காராகும். இதனை கார் என்று கூறுவதற்கு பதிலாக அரக்கன், முரடன் என எந்த புனைப் பெயரை வைத்து வேண்டுமானாலும். ஏனெனில் அந்தளவிற்கு மிகவும் அதீத பவரை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் காராக இதனை ஏரியல் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

உதாரணமாக ஏரியல் ஹைப்பர் கார் காரில் நான்கு மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இணைந்து 1,180 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன். இந்த சூப்பர் வெளியேற்றும் காரை ஏரியல் நிறுவனம் 2024ம் ஆண்டிற்குள் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைப்பர் கார் என்பது தற்காலிக பெயர் என்று கூறப்படுகின்றது.

ஆகையால், இது விற்பனைக்கு வரும்போது புதிய பெயரைக் கொண்டிருக்கும். நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளைப் போலில்லாமல் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காரின் சில முக்கிய கூறுகளை எளிதில் காணக் கூடிய வடிவமைப்பே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கா நேக்கட் ட்யூப்ளர் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ஹைப்பர் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் நான்கும் ஏபிஎல்எம் 200 ஆகும். இதற்கு தேவையான மின்சார திறனை வழங்குவதற்காக ஹைப்பர் காரில் 62 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 மைல்கள் வரை பயணிக்க முடியும். அதாவது, 241.4 கிமீ வரை பயணிக்க முடியும்.

ஏரியல் நிறுவனம் ராட்சசன் எலெக்ட்ரிக் காரை வெறும் பின் வீல் இயக்கம் கொண்ட தேர்விலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த வெர்ஷன் அதிகபட்சமாக 590 பிஎச்பி பவரை மட்டுமே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், இதன் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வானது 1,180 பிஎச்பி பவரையும், 1,800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இதனுடன் 1,20,000 ஆர்பிஎம் மற்றும் 35kW (46.9 பிஎச்பி) பவரை வெளியேற்றக் கூடிய மைக்ரோ டர்பைன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ டர்பைன் விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைனைப் போன்றில்லாமல், பெட்ரோலிலேயே இயங்கும். வரும் காலத்தில் பிற எரிபொருளிலும் இயங்கக் கூடிய டர்பனை இந்த காரில் பயன்படுத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த அனைத்து எந்திரங்களின் உதவியுடன் ஹைப்பர்கார் அதிக வேகத்தில் செல்லும். குறிப்பாக, 2.09 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 96.5 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். அதேவேலையில், வெறும் 4.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 161 கிமீ எனும் பயணிக்கும். இக்காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேக திறன் காரணத்தினாலேயே ஏரியல் ஹைப்பர்காரை சிலர் ராட்சசன் என அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த காரில் மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக மெஷின்ட் அலுமினியம் டூயல் விஷ்போன்ஸ்கள் முன் மற்றும் பின் பக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், அட்ஜஸ்ட் செய்யக் கூடிய பைல்ஸ்டைன் டேம்பர்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ஆன்டி ரோல் பார்கள் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்படுள்ளன. சிறந்த பிரேக்கிங்கிற்காக ஏபி ரேஸிங் டிஸ்க்குகள், ஆறு பிஸ்டன் காலிபர்களுடன் முன் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பின் பக்கத்தில் நான்கு பிஸ்டன் காலிபர்களுடன் பிரேக்கிங் செட்-அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரேக்கிங் டிஸ்க்குகள் வெவ்வேறு அளவிலானவை. ஆம், முன் பக்கத்தில் 370 மிமீட்டரும், பின் பக்கத்தில் 328 மிமீட்டர் அளவுக் கொண்டதாகவும் அவை காட்சியளிக்கின்றன. இந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது லேசான எலெக்ட்ரிக் பவரை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு பங்களிக்கும் விஷயங்களில் வீல்களும் ஒன்று. இது 20 அங்குல வீல்கள் ஆகும். இது முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீலின் அளவாகும். பின் பக்கத்தில் 21 அங்குல வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மிஷ்லின் கப் 2 டயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
விற்பனைக்கு வரவிருக்கும் ஏரியல் ஹைப்பர்காரில் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட வீல்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன. எடையை குறைத்தல், அதே வேலையில் அதிக உறுதிக்காக இந்த ரக வீல்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த சூப்பர் ஹைப்பர்காரில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விற்பனைக்கு வரும்போது இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








