சென்னையிலேயே ஹைபிரிட் வாகனங்களை தயாரிக்க போறாங்க! ஒட்டுமொத்த இந்தியாவின் தாகத்தை தீர்க்க அசோக்லேலண்ட் திட்டம்!
அசோக் லெலண்ட் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகிய இரண்டும் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வாகனங்களுக்காக உருவாக்க இணைந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸுடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டிலேயே வைத்து ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை மேற்கொள்ளும் விதமாக இந்த கூட்டணியானது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

உலக சந்தையை போலவே இந்தியாவிலும் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. டொயோட்டாவின் அர்பன் க்ரூரஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பு இதற்கு சான்று. இரு கார்களும் சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இப்போதே அவற்றிற்கு ஆறு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவும் வகையில் மிக சூப்பரான வரவேற்பை அவை பெற தொடங்கியிருக்கின்றன.

இந்த மாதிரியான மிக சூப்பரான டிமாண்டே ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அசோக் லேலண்டும், ஐஐடி மெட்ராஸும் இந்த ரக (ஹைபிரிட் எலெக்ட்ரிக்) வாகனங்களை உருவாக்கும் பொருட்டு இணைந்திருக்கின்றன. குறிப்பாக, சுர்ல் மெஷ் லீன் டைரக்ட் இன்ஜெக்சன் (Swirl Mesh Direct Injection) சிஸ்டத்தை மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணியை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஐஐடி மெட்ராஸில் உள்ள ஆராய்ச்சி குழுவான நேஷனல் சென்டர் ஃபார் கம்பியூசன் ரிசர்ச் உடனேயே அசோக் லேலண்ட் கூட்டு சேர்ந்திருக்கின்றது. இந்த குழு சுர்ல் மெஷ் லீன் டைரக்ட் இன்ஜெக்சன் சிஸ்டத்தை ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்களுடன் இணைந்து இயங்க செய்ய வைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றது. ஏற்கனவே இந்த குழு மைக்ரோ கேஸ் டர்பைன் கம்பியூசன் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த தொழில்நுட்பத்தின் முதன்மையான மோட்டாராக எலெக்ட்ரிக் மோட்டார் செயல்படும். ஆமாங்க, மைக்ரோ கேஸ் டர்பைன் தொழில்நுட்பத்தை மின்சாரமாக கன்வெர்ட் செய்து, அதன் வாயிலாக வாகனத்தை இயங்கச் செய்யும் முயற்சியிலேயே என்சிசிஆர்டி ஈடுபட்டு வருகின்றது. இந்த சூப்பரான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை ஏரோஸ்ட்ரோவிலோஸ் எனெர்ஜி உடன் இணைந்து அது மேற்கொண்டு வருகின்றது.

இந்த மைக்ரோ கேஸ் டர்பைன் பெரியளவிலான பேட்டரியின் தேவையைக் குறைக்க உதவும். இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியிலேயே ஐஐடி மெட்ராஸில் இயங்கி வரும் என்சிசிஆர்டி மற்றும் ஏரோஸ்ட்ரோவிலோஸ் எனெர்ஜி ஆகிய இரண்டும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் என்சிசிஆர்டி, ஐஐடி மெட்ராஸுடன் இணைந்திருக்கின்றது.

புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் உருவாக்கத்திற்காக அசோக் லேலண்ட் அதன் 9 மீட்டர் அளவுள்ள பயணிகள் பேருந்தை என்சிசிஆர்டி வசம் ஒப்படைத்திருக்கின்றது. இந்த வாகனத்தையே ஆராய்ச்சி குழு பன்முக எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றியமைக்க இருக்கின்றது.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அசோக் லேலண்டின்கீழ் ஹைபிரிட் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்த வாகனங்கள் 'டர்பைன் எலெக்ட்ரிக் வாகனங்கள்' என்கிற பெயரில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக மிக குறைவான மாசு உமிழ்வு, மிக குறைவான பராமரிப்பு செலவு, எந்த எரிபொருளிலும் இயங்கும் திறன் உள்ளிட்டவற்றைக் கொண்ட வாகனமாக அது இருக்கும்.

இந்த ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் பன்முக எரிபொருளில் இயங்கும் திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயோகேஸ், சிஎன்ஜி, எல்என்ஜி, டீசல் மற்றும் ஹைட்ரஜன் போன்ற பல எரிபொருளில் இயங்கும் திறனுடன் அது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த எஞ்ஜின் மிகுந்த எடைக் குறைவானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








