இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியுமா?.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் டிபிஎக்ஸ் 707 (Aston Martin DBX 707) எனும் உலகின் மிக அதிக திறன் வெளிப்படுத்தக் கூடிய வெளியீடு செய்திருக்கின்றது. இக்கார் குறித்த கூடுதல் சிறப்பு தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு சொகசு வாகன உற்பத்தி ஈடுபட்டு வரும் நிறுவனம், ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin). இந்நிறுவனம் நேற்று (பிப்ரவரி 2) டிபிஎக்ஸ் 707 (DBX 707) எனும் ஆடம்பர எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்தது. இந்த வெறும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த காராக மட்டுமின்றி உலகின் அதி-வேக எஸ்யூவி காராகவும் அஸ்டன் மார்ட்டின் உருவாக்கி இருக்கின்றது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இதற்காக டிபிஎக்ஸ் 707 லக்சூரி காரில் 697 எச்பி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, சொகுசு காரை மிக திறன் வெளிப்படுத்தும் எஸ்யூவி-ஆக மாற்றியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் வெறும் 3.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லக் கூடியது. அதே நேரத்தில் இக்காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 310 கிமீ ஆக இருக்கின்றது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இது தற்போது விற்பனையில் இருக்கும் எந்த எஸ்யூவி காரும் வெளிப்படுத்தாத திறன் என கூறப்படுகின்றது. அதிக சொகுசு வசதிகள், மிக சிறந்த எஞ்ஜின் திறன் வெளிப்பாடு ஆகியவற்றால் இக்கார் மிக அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. டிபிஎக்ஸ் 707 காருக்கு 232,000 அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் இக்காரின் விலை 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ஆகும். இத்தகைய உயரிய விலையிலேயே அதி திறன் கொண்ட சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. காரின் உற்பத்தி பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

நடப்பாண்டின் முதல் காலாண்டு முடிவடைவதற்குள் இப்பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, டிபிஎக்ஸ் 707 காரின் டெலிவரி பணிகள் இதே ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்பட இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகிய அதி-வேக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அமையும்.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 லக்சூரி எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 697 எச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க்கை திறன்களை வெளியேற்றும். சூப்பர் பவர் திறனை வெளிப்படுத்துவதற்காக இந்த எஞ்ஜினில் இரு புதிய டர்போசார்ஜர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இதுமட்டுமின்றி, சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 9 ஸ்பீடு வெட்-க்ளட்ச் கியர்பாக்ஸ் மேனுவல் மற்றும் தானியஹ்கி மோட்களில் வழங்கப்பட்டுள்ளன. இது மிக சிறப்பான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை. தொடர்ந்து, ஓட்டுதலை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் அனைத்து வீல் இயக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இதனை தேவைக்கேற்ப முன் வீல் அல்லது பின் வீல் என மாற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், அப்டேட் செய்யப்பட்ட ஏர் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய டேம்பர்கள் மற்றும் ஸ்பிரிங்குகளைக் கொண்டிருக்கின்றது. மேலும், எலெக்ட்ரானிக் ஆக்டீவ் ரோல் கன்ட்ரோல் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இவை அனைத்தும் சேர்ந்து அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 காரை மிக மிக அதிக சொகுசான காராக மாற்றியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்த காரில் பயணிப்பது கப்பலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அனைத்து அம்சங்களும் உள்ளன.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 22 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் 23 இன்ச் அளவுள்ள வீல்களை கூடுதல் கட்டணத்துடன் வழங்க இருக்கின்றோம் என அஸ்டன் மார்ட்டின் தெரிவித்துள்ளது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக கார்பன் செராமிக்கினாலான 6 பிஸ்டன்கள் கொண்ட கேல்லிபர் டிஸ்க்குகள் பயனப்டுத்தப்பட்டுள்ளன. இது 16.5 இன்ச் அளவில் முன் பக்கத்திலும், 15.4 இன்ச் அளவில் பின் பக்கத்திலும் காட்சியளிக்கின்றது. இது காரின் மிக உயரிய வேகத்தைக் கூட மிக சுலபமாக கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவ்ளோ வேகமா போன நம்மால தாங்க முடியும்!.. உலகின் மிக அதிக திறன் கொண்ட எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்தியாவில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் டிபிஎக்ஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுவே நிறுவனம் கடைசியாக இந்தியாவில் அறிமுகம் செய்த சொகுசு காராகும். 2021 ஜனவரியிலேயே இக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 3.82 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், டிபி11 மற்றும் வேண்டேஜ் மாடல் கார்களையும் இந்நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 2, 2022, 10:56 [IST]
English summary
Aston martin unveiled world s most powerful suv dbx 707
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+