அசுரன் பட ஹீரோயின் வாங்கிய சூப்பரான மின்சார கார்... இந்த காரை மொத்தமாவே 30 இந்தியர்கள்தான் வச்சிருக்காங்க!
அசுரன் திரைப்பட ஹீரோயின் மஞ்சு வாரியர் சூப்பரான மின்சா காரை வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் மினி (Mini), அண்மையில் அதன் முதல் மின்சார கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மினி எலெக்ட்ரிக் (Mini Electric) எனும் மாடலையே அது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. உலக சந்தையில் இக்கார் கூப்பர் எஸ்இ (Cooper SE) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவிற்காக வெறும் 30 யூனிட்டுகள் மினி எலெக்ட்ரிக் காரை மட்டுமே நிறுவனம் ஒதுக்கியது. இதில் ஒன்றையே பிரபல திரை நட்சத்திரம் மஞ்சு வாரியர் தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் மஞ்சு வாரியரும் ஒருவர். இந்த திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அவர் அறிமுகமானார்.

மேலும், இந்த முதல் படத்திலேயே தமிழ் திரை ரசிகர்களின் மனதை அவர் கொள்ளையடித்துவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீமாகக் கொண்ட இவர், தற்போது கேரள மாநிலத்தில் வசித்து வருகின்றார். மேலும், மலையாள திரையுலகில் முன்னணி பெண் நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்திருக்கின்றார். இவரை மலையாள ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கத் தொடங்கியிருக்கின்றார்.

இத்தகைய ஓர் நடிகையே மினி களமிறக்கிய 30 யூனிட்டுகளில் ஓர் யூனிட் மினி எலெக்ட்ரிக் காரை வாங்கியிருக்கின்றார். மினி நிறுவனம் இந்த மின்சார காருக்கான புக்கிங் பணிகளை ரூ. 1 லட்சம் முன் தொகையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட இரண்டே மணி நேரங்களில் அனைத்து யூனிட்டுகளையும் இந்தியர்கள் புக் செய்தனர்.

இவ்வாறு வெறி தனமாக புக் செய்த இந்தியர்களில் மஞ்சு வாரியரும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 47.20 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த மின்சார காரையே மஞ்சு வாரியர் தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.

மினி எலெக்ட்ரிக்-இல் 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 32.6 கிலோவாட் லித்தியம் அயன்-பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இப்பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இக்காரை 2.5 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

மினி எலெக்ட்ரிக் உச்சபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி வெறும் 7.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இக்கார் எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல் மாடலைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வந்திருக்கும் இந்த கார் அதிக எடையைக் கொண்டது என மினி தெரிவித்துள்ளது. 145 கிலோ அதிக எடையை மினி எலெக்ட்ரிக் கொண்டிருக்கின்றது.

மூன்று கதவுகள் அமைப்புக் கொண்ட மின்சார காராக மினி எலெக்ட்ரிக் காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி பெட்ரோல் வேரியண்டில் இருந்து மாறுபட்டு காணப்பட வேண்டும் என்பதற்காக காரின் குறிப்பிட்ட சில இடங்களில் 'இ' எனும் பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது மின்சார கார் என்பதை குறிக்கும் வகையில் இப்பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், புதிய முன்பக்க க்ரில் பேனல் உள்ளிட்டவையும் மினி எலெக்ட்ரிக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 3 விதமான நிற தேர்வுகளில் இம் மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








